Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/திருக்குறள்: குறள் சொல்லும் குரல்

திருக்குறள்: குறள் சொல்லும் குரல்

திருக்குறள்: குறள் சொல்லும் குரல்


PUBLISHED ON : மே 10, 2026

Follow on Google

PUBLISHED ON : மே 10, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இந்த பூமியானது நம் எதிர்கால சந்ததிகளிடமிருந்து கடனாகப் பெற்றது'ன்னு ஒரு செவ்விந்திய பழமொழி உண்டு. இந்த அடிப்படையில, என் கடனை அடைக்கிற சின்ன முயற்சியா மரபு காய்கறி விதைகளை தந்துட்டு இருக்குறேன்!

யார் குரல்?

வானவன் (எ) குழந்தைவேல்

வயது

51

அடையாளம்

இயற்கை நேசிப்பாளர்

தொழிற்கல்வி பயின்றிருக்கும் வானவன் தனியார் நிறுவனத்தின் சாதாரண தொழிலாளி; பிழைப் புக்காக சென்னைவாசியாய் இருக்கும் வேதாரண்யத்துக்காரர். கடந்த 15 ஆண்டுகளாக மரபு காய்கறி விதைகளை பரவலாக்கி, 'இயற்கை வேளாண்மை' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

விதைகள் விற்பனைக்கல்ல

'என்னோட 33 வயசுல எனக்கு வந்த நீரிழிவு நோய் தான் இந்த எல்லாத்துக்குமான துவக்கம். ரசாயனம் கலக்காத காய்கறிகள் வேணும்னு மாடியில தோட்டம் போட்டேன். சென்னை, விதைத் திருவிழாவுல முசிறி யோகநாதன் மூலமா மரபு காய்கறி விதைகள் கிடைச்சது.

என் தேவை போக கையில இருந்த விதைகளை என்னோட நண்பர் களுக்கும், தெரிஞ்ச வங் களுக்கும் கொடுத்தேன். அது அப்படியே பழக்கமாகி, இப்போ அதுவே என் அடையாளம் ஆயிருச்சு!

தன்னிடம் விதைகள் கேட்போருக்கு மனைவி, இரு மகள்கள் உதவியுடன் தபாலில் அனுப்பி வைக்கிறார் வானவன். இதற்கு இவர் பணம் ஏதும் பெறு வதில்லை.

சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்ய முடியாத இவரது ஏக்கத்தை மரபு காய்கறி விதைகள் பரவலாக்கம், மாடித்தோட்டம், 'உயிர்வேலி' விழிப்புணர்வு செயல்பாடு, சென்னை, மாத்துார் சுற்றுப் புறங்களில் மரங்கள் நடுதல், குறுங்காடுகள் உருவாக்கம் உள்ளிட்டவை தீர்த்து வைக் கின்றன!

இந்த சேவையில் மிச்சமிருக்கும் ஆசை?

என்கிட்டே விதைகள் வாங்கின வங்க என்னை மாதிரியே அதை நாலு பேருக்கு தரணும்னு பேராசை இருக்கு. எனக்குள்ளே இருக்கிற விவசாயிக்கு இந்த தீனி போதாது; நான் யோசிக்கிற விவசாயத்தை, 'ஒரக்குழி, போத்து'ன்னு இரண்டு புதினங்களா எழுதியிருக்கேன்.

'ஒரக்குழி'யை வாசிச்சுட்டு எழுத்தாளர் வண்ணதாசன், 'நாவல் பேசும் விஷயம் சாத்தியமா என்பது தெரிய வில்லை; நிகழ்ந்தால் நன்றாக இருக்கும்'னு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்.

'விவசாயத்தை கட்டுப்படுத்த நினைக்கிறவங்களுக்கும், அதை மீட்க விரும்புறவங்களுக்கும் விதைகள்தான் ஆயுதம்'னு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா சொல்வார்; ஓர் ஆயுதம் ஆக்கவும், அழிக்கவும் செய்யும்; நான் பரவலாக்குற மரபு விதைகள் ஆக்கத்துக்கான ஆயுதங்கள்.

குறள் சொல்லும் குரல்: எண்: 1021

கருமம் செயஒருவன் கைதுாவேன் என்னும் பெருமையின் பீடுஉடையது இல்

பொருள்: 'குடிப்பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்கு சோர்வடைய மாட்டேன்' என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

கா.குழந்தைவேல் 98841 92924

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us