Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/செல்லமே/ வினோதமான வெளிநாட்டு செல்லப்பிராணிகள்

 வினோதமான வெளிநாட்டு செல்லப்பிராணிகள்

 வினோதமான வெளிநாட்டு செல்லப்பிராணிகள்


ADDED : மே 16, 2026 06:44 AM

Follow on Google

ADDED : மே 16, 2026 06:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, பழைய வண்ணாரபேட்டையை சேர்ந்த, 'ஸ்வீட்டி பெட் ஷாப்' உரிமையாளர் கார்த்திக்ராஜா. வெளிநாட்டு செல்லப்பிராணிகளின் தனித்துவமான குணாதிசயங்கள் குறித்து, இவர் நம்மிடம் பகிர்ந்தவை:

டாரன்டுலா (Tarantula)


நம்மூரு சிலந்தியை விட அளவில் பெரியது. கிட்டத்தட்ட ஒரு அடி வரை வளரும். இதில், 40 வகை சிலந்திகள் உள்ளன. வித்தியாசமான பல நிறங்களில் கிடைக்கிறது. இதில், ஆண், பெண் டாரன்டுலாவை தனித்தனியாக தான் வைத்து வளர்க்க வேண்டும். பெண் சிலந்தி வலை கட்ட ஆரம்பித்தால், அது இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிட்டது என புரிந்து கொள்ள வேண்டும். ஒருமுறை இனப்பெருக்கம் செய்தால், கிட்டத்தட்ட 800 - 1,000 குட்டிகளை ஈனும். இவை வளரும் போது தன் தோலை உரித்து கொள்ளும். இதில், கால்களை இழந்தால், மீண்டும் உருவாக்கி கொள்ளும் திறன் கொண்டவை.

இக்வானா (Iguana)


சிவப்பு, பச்சை, மஞ்சள் உள்ளிட்ட பல நிறங்களில் இக்வானா உள்ளன. அதிகபட்சம் 6 அடி வரை வளரும். ஒரு அடி நீளம் இருக்கும் போதே வாங்கி, உணவு கொடுக்க துவங்கினால் தான், உரிமையாளருடன் எளிதில் நெருங்கும். பூசணி, கேரட், கீரைகள், செம்பருத்தி பூ, பன்னீர் ரோஜா போன்றவற்றை விரும்பி சாப்பிடும். நிறைய தண்ணீர் குடிக்கும். இவற்றை, மீன் தொட்டி, பிளாஸ்டிக் தொட்டி அல்லது வெளியில் வைத்தும் வளர்க்கலாம்; வேகமாக நகர்ந்து செல்லாது. இக்வானாக்களின் தலை உச்சியில் ஒரு ஒளி உணர் உறுப்பு இருக்கும்.இதை கொண்டு துாக்க சுழற்சி, ஹார்மோன் செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்தி கொள்ளும்.

டிராகன் (Bearded Dragon)


இது ஒரு வகை பல்லி. தாடி போன்ற சிறு சிறு முட்கள் கொண்ட டிராகனை, செல்லப்பிராணியாக வளர்க்க பலரும் விரும்புகின்றனர். இவை குத்தாது; தொட்டால் ஆபத்து இல்லை.மஞ்சள், வெள்ளை, சிவப்பு, ஆரஞ்ச் என பல வண்ணங்களில் கிடைக்கிறது. கிட்டத்தட்ட 2 அடி நீளமும், அரை அடி அகலம் வரை வளரும். அதிகபட்சம் 8-9 ஆண்டுகள் உயிர்வாழும். நெதர்லாந்து நாட்டை சேர்ந்த இந்த டிராகனுக்கு, பழங்கள், காய்கறிகள், பூச்சி வகைகளை உணவாக அளிக்கலாம். இவை பொதுவாக, அதீத குளிர் காலங்களில், தன் தோலை கறுப்பாகவும், வெயில் காலங்களில் வெப்பத்தை பிரதிபலிக்க தோலை வெள்ளையாகவும் மாற்றி கொள்ள முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap