sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/செல்லமே/ சந்தைக்கு புதுசு!

 சந்தைக்கு புதுசு!

 சந்தைக்கு புதுசு!


UPDATED : மார் 07, 2026 07:59 AM

ADDED : மார் 07, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 07, 2026 07:59 AM ADDED : மார் 07, 2026 06:12 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மறக்காம வாங்கிடுங்க!


எப்போதும் ஆக்டிவாக இருக்கும் உங்கள் பப்பி, திடீரென சோர்வாகி மூலையில் படுத்து கொள்கிறதா.... அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர, சில பொம்மைகள் வாங்கி கொடுத்து குஷிப்படுத்தலாம்.

தற்போது மார்க்கெட்டில் அதிக டிரெண்டில் இருப்பது, அணில்குட்டி பொம்மை தான். இவை, ஒளிந்து கொண்டு எட்டிப்பார்ப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கும். இதை பப்பியின் அருகில் வைத்தால், நாம் இருக்கும் இடத்தில், யார் இது புதுசா... என்பது போல, விளையாட ஆரம்பிக்கும். நீங்கள் வீட்டிலில்லாத போது, இந்த பொம்மை அருகில் வைத்தால், அதனுடன் விளையாடி கொண்டே, உடலின் எனர்ஜியை வெளியேற்றி விடும். சிறிது நேரம் கழித்து உணவு கொடுத்தால், விளையாடி அசதியில் தொந்தரவு செய்யாமல் படுத்துறங்கி விடும்...

தாகம் தணிய..!



வெ யில் காலம் துவங்கிவிட்டதால், காலை, மாலையில் பப்பியை வெளியிடங்களுக்கு அழைத்து செல்லும் போது, வாட்டர் பாட்டிலை மறந்துடாதீங்க.

இது, நிறைய மாடல்களில் கிடைக்கிறது. தண்ணீர் வீணாகாத வகையில், தற்போது சந்தைக்கு வந்துள்ள, இந்தபுதிய மாடல் பாட்டிலை சற்று அழுத்தினால் மூடியில் தண்ணீர் வரும். பப்பி குடித்ததும், மீதமுள்ள தண்ணீர் உள்ளே சென்றுவிடும். நீண்ட துார பயணங்களுக்கு ஏற்றது. பல்வேறு அளவுகளில் கிடைப்பதால், உடனே ஆர்டர் செய்து வாங்கிடுங்க.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us