ADDED : அக் 04, 2025 05:43 AM

ப ப்பி, மியாவ், பறவை வளர்ப்பவர்கள், வெளியூர் செல்லும் போது உடன் கொண்டு செல்லலாம். மீன் வளர்ப்பவர்கள், வீட்டிலில்லாத போது, உரிய நேரத்தில் அதற்கு உணவளிக்க யாரை அணுகுவது என தெரியாமல் திண்டாடுவர். இனி அந்த அவஸ்தை வேண்டாம்.
மார்கெட்டில் தற்போது, 'ஆட்டோமேட்டிக் பிஷ் பீடர் மிஷின்' கிடைக்கிறது. இதில், எத்தனை மணிக்கு, எவ்வளவு உணவு வெளியேற வேண்டுமென, பதிவு செய்தால் போதும். ஒருநாளைக்கு மூன்று முறை வரை, மூன்று நாட்கள் வரை உணவை நிரப்பி கொள்ளலாம். இந்த பீடர் மிஷினை, மீன் தொட்டி, அலங்காரத்திற்காக உருவாக்கும் மீன் குளம் ஆகியவற்றில் வைக்கலாம். குறைந்தபட்சம் 1,500 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. இதை வாங்கி பொருத்திவிட்டால், மீனுக்கான உணவு இடைவேளை பற்றி கவலைப்பட வேண்டாம்.


