போர்ஸ் 'அர்பேனியா டீலக்ஸ்' 'பென்ஸ்' இன்ஜினுடன் 16 சீட்டர் வேன்
போர்ஸ் 'அர்பேனியா டீலக்ஸ்' 'பென்ஸ்' இன்ஜினுடன் 16 சீட்டர் வேன்
ADDED : ஆக 12, 2026 07:22 AM

'போர்ஸ் மோட்டார்ஸ்' நிறுவனம், 'அர்பேனியா டீலக்ஸ்' என்ற 9 முதல் 16 சீட்டர் பயணியர் வேனை, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இது, 3,350 எம்.எம்., முதல் 4,400 எம்.எம்., வீல் பேஸ் வரை மூன்று மாடல்களில் கிடைக்கிறது.
இந்த வேனில், லெதர் சீட்கள், பிரீமியம் கேபின், 9 அங்குல டிஸ்ப்ளே மற்றும் டி.எப்.டி., கிளஸ்டர், நேவிகேஷன், ரிவர்ஸ் ஹெச்.டி., கேமரா, வாகன எச்சரிக்கை வசதி, ஒயர்லெஸ் இணைப்பு வசதிகள், 3 - பாயிண்ட் சீட் பெல்ட், 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், யூ.எஸ்.பி., ஏ மற்றும் சி - டைப் போர்ட், பவர்டு ஸ்லைடிங் கதவுகள் ஆகிய அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே உள்ள 'பென்ஸ்' நிறுவனத்தின் '2.6 லிட்டர், 4 சிலிண்டர், டீசல்' இன்ஜின் நீடிக்கிறது. இன்ஜின் பவர் 20 ஹெச்.பி., அதிகரித்து, 134 ஹெச்.பி.,யாக உயர்த்தப்பட்டுள்ளது. ரியர் வீல் டிரைவ் அமைப்பில் வரும் இந்த வேன், 5 - ஸ்பீடு மேனுவல் கியர்பாக்சில் மட்டுமே வருகிறது. 70 லிட்டர் டேங்க், 8 - 10 கி.மீ., மைலேஜ் தருகிறது.
இரு காற்று பைகள், ஆல் வீல் டிஸ்க், ஏ.பி.எஸ்., இ.எஸ்.பி., உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஐந்து ஆண்டு அல்லது ஐந்து லட்சம் கி.மீ., வரை உத்தரவாதம் கிடைக்கிறது.
