மாருதி சுசூகி விக்டோரிஸ் எஸ்.யூ.வி., அடாஸ் லெவல் - 2, ஆல் வீல் டிரைவ், 5 - ஸ்டார்
மாருதி சுசூகி விக்டோரிஸ் எஸ்.யூ.வி., அடாஸ் லெவல் - 2, ஆல் வீல் டிரைவ், 5 - ஸ்டார்
மாருதி சுசூகி விக்டோரிஸ் எஸ்.யூ.வி., அடாஸ் லெவல் - 2, ஆல் வீல் டிரைவ், 5 - ஸ்டார்
UPDATED : செப் 10, 2025 08:13 AM
ADDED : செப் 10, 2025 08:11 AM

'மாருதி சுசூகி' நிறுவனம், 'விக்டோரிஸ்' என்ற புதிய எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. இது, அடாஸ் லெவல் - 2 பாதுகாப்பு உள்ள முதல் மாருதி கார் ஆகும். பாரத் என்கேப் கிராஷ் டெஸ்டில், 5 - ஸ்டார் பெற்றுள்ளது.
'விட்டாரா' எஸ்.யூ.வி.,யில் வரும் 1.5 லிட்டர், மைல்டு ஹைபிரிட், ஸ்ட்ராங் ஹைபிரிட் மற்றும் சி.என்.ஜி., என மூன்று மாடல்களில் இன்ஜின் வருகிறது. பூட் ஸ்பேஸ் குறையாமல் இருக்க, காருக்கு அடியில் இரு சி.என்.ஜி., டேங்குகள் வழங்கப்படுகின்றன. 5 - ஸ்பீடு மேனுவல், 6 - ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் மற்றும் இ - சி.வி.டி., ஆட்டோ கியர் பாக்ஸ்களில் வரும் இந்த கார், பிரண்ட் வீல் மற்றும் ஆல் வீல் டிரைவ் அமைப்புகளிலும் கிடைக்கின்றன.
![]() |
மாருதியின் முதல் மின்சார காரான 'இ - விட்டாரா' காரின் டிசைனை அடிப்படையாகக் கொண்டு இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. விட்டாரா காரை விட, நீளம் 15 எம்.எம்., உயரம் 10 எம்.எம்., அதிகம். மெல்லிசான கிரில், குரோம் அலங்காரங்கள், ப்ரொஜக்டர் எல்.இ.டி., லைட்டுகள், டெயில் லைட்டுகள், 17 அங்குல அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
ஐந்து சீட்டர் அமைப்பில் வரும் இந்த காரில், 10.1 அங்குல டூயல் டிஸ்ப்ளே, டால்பி அட்மோஸ் வசதியுடன் 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், அலங்கார விளக்குகள், வயர்லெஸ் அம்சங்கள், வெண்ட்டிலேட்டட் மற்றும் எலக்ட்ரானிக் சீட்கள், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, கேபின் பில்டர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. பாதுகாப்புக்கு, 6 காற்று பைகள், 360 டிகிரி கேமரா, டிராக் ஷன் கன்ட்ரோல் உள்ளிட்டவை கிடைக்கின்றன.