ADDED : செப் 17, 2025 08:38 AM

பைக் ஹெல்மெட் உற்பத்தியாளரான 'ஸ்டட்ஸ்' நிறுவனம், 'வோக் டி1 ஸ்கொயர்' என்ற ஓப்பன் பேஸ் ஹெல்மெட்டை அறிமுகம் செய்துள்ளது. இது, 'வோக்' ஹெல்மெட் அணிவகுப்பின் முதல் 'கிராபிக் சிரீஸ்' ஹெல்மெட் ஆகும்.
இந்த ஹெல்மெட், 'ஐ.எஸ்.ஐ.,' மற்றும் 'பி.ஐ.எஸ்.,' தரச்சான்றிதழ்களை பெற்றுள்ளது. இதன் உட்புற ஷெல், அதிக தாக்கத்தை தாங்கும் 'இ.பி.எஸ்.,' என்ற 'தெர்மோ பிளாஸ்டிக்' பொருளால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆறு கருப்பு டூயல் டோன் நிறங்களில் கிடைக்கும் இந்த ஹெல்மெட், 'எக்ஸ்.எஸ்., எஸ், எம் மற்றும் எல்' ஆகிய அளவுகளில் கிடைக்கிறது. ஆன்லைனிலும் இதை வாங்கலாம்.