Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ நீங்கள் கட்டப்போகும் வீட்டை கட்டும் முன்பே பார்க்கலாம்!

நீங்கள் கட்டப்போகும் வீட்டை கட்டும் முன்பே பார்க்கலாம்!

நீங்கள் கட்டப்போகும் வீட்டை கட்டும் முன்பே பார்க்கலாம்!

நீங்கள் கட்டப்போகும் வீட்டை கட்டும் முன்பே பார்க்கலாம்!

ADDED : அக் 03, 2025 09:36 PM


Google News
Latest Tamil News
இ ன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம், வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. அந்த வகையில், மெய்நிகர் யதார்த்தம்(விர்ச்சுவல் ரியாலிட்டி) தற்போது உட்புற வடிவமைப்பு துறையையும் மாற்றி அமைத்திருக்கிறது என்கிறார், 'காட்சியா' நிர்வாக அலுவலர் குமரவேல்.

அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது...

முன்னர் வீடு, அலுவலகம், கடை போன்ற இடங்களை வடிவமைப்பது, காகிதத்தில் வரைபடங்கள் அல்லது 'கம்ப்யூட்டர் 3டி' மாடல்களில் சாத்தியமாக இருந்தது. ஆனால் இன்று 'விர்ச்சுவல் ரியாலிட்டி' (வி.ஆர்.,) தொழில்நுட்பத்தின் உதவியுடன், வாடிக்கையாளர்கள் தங்களது எதிர்கால இல்லத்தையோ அல்லது அலுவலகத்தையோ, நிஜம்போல் நேரடியாக அனுபவிக்கலாம்.

புதிதாக வீடு கட்ட விரும்பும் ஒவ்வொரு வரும் வி.ஆர்., ஹெட்செட் அணிந்து தனது ஹாலில் வைத்திருக்க விரும்பும் சோபாவின் நிறம், சுவற்றின் வண்ணம், படுக்கையறையின் ஒளி விளக்குகள், சமையலறையின் அலமாரிகள் என, அனைத்தையும் அறையின் உள்ளே சென்று பார்த்து தேர்வு செய்யலாம்.

இதனால், திட்டத்தில் மாற்றங்கள் தேவையானால், அவற்றை முன்கூட்டியே சுலபமாக செய்ய முடியும். இத்தகைய தொழில்நுட்பம் பொறியாளர், ஆர்க்கிடெக், டிசைனர் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியோருக்கிடையே, சிறந்த புரிதலை உருவாக்குகிறது. அதே சமயம் செலவையும் குறைக்கிறது.

ஏனெனில், பின்னர் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் பெரும்பாலும் ஏற்படாது. அடுத்த சில ஆண்டுகளில் வி.ஆர்., உட்புற வடிவமைப்பின் அத்தியாவசிய கருவியாக மாறக்கூடும். இது வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல; வீட்டினை கனவுகளுக்கு ஏற்ப உருவாக்கும்புதுமையான அனுபவம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us