Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/கனவு இல்லம்/சிறப்பு கட்டுரை/ அஸ்திவார பள்ளத்தில் மண் கொட்டுவதில் நடக்கும் தவறுகள் என்ன?

அஸ்திவார பள்ளத்தில் மண் கொட்டுவதில் நடக்கும் தவறுகள் என்ன?

அஸ்திவார பள்ளத்தில் மண் கொட்டுவதில் நடக்கும் தவறுகள் என்ன?

அஸ்திவார பள்ளத்தில் மண் கொட்டுவதில் நடக்கும் தவறுகள் என்ன?

ADDED : செப் 27, 2025 01:42 AM


Google News
Latest Tamil News
பு திதாக வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிடுவோர் அதற்கான பூர்வாங்க பணிகளை துவக்கும் நிலையில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக, ஒரு கட்டடம் நிலைத்து நிற்க வேண்டும் என்றால், அதன் அஸ்திவாரத்துக்கான பணிகள் முறையாக நடக்க வேண்டும் என்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது.

கட்டடத்தின் மொத்த அளவு, அதன் பரப்பளவு, உயரம் ஆகியவற்றின் அடிப்படையில் அஸ்திவாரத்துக்கான வடிவமைப்பை முடிவு செய்ய வேண்டும். இதில், மண் பரிசோதனை அறிக்கை அடிப்படையில் அஸ்திவா ரத்துக்கான ஆழம் உள்ளிட்ட விஷயங்களை பொறியாளர்கள் முடிவு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

குறிப்பாக, நீங்கள் வாங்கிய நிலம் அமைந்துள்ள பகுதியில் உள்ள மண் அடுக்குகள் குறித்து அறிந்த பொறியாளர் வாயிலாக வீடு கட்டும் போது இந்த விஷயத்தில் குழப்பங்கள் தவிர்க்கப்படும். அந்த பகுதியின் மண் அடுக்குகள் குறித்து அறியாமல் வெளியில் இருந்து வரும் பொறியாளர்களுக்கு இதில் தெளிவு ஏற்பட சற்று தாமதம் ஆகும்.

அதே நேரத்தில் அஸ்திவாரத்துக்கான பள்ளம் தோண்டும் பணிகளை எப்படி மேற்கொள்வது என்பதற்கும் உரிய வழிமுறைகள் உள்ளன. குறிப்பாக மனையின் உட்புற கடைசி பகுதியில் முதலில் அஸ்திவார பள்ளம் தோண்டுவது நல்லது.

இதற்கு மாறாக முகப்பு பகுதியில் முதலில் பள்ளம் தோண்டினால், உட்புற பகுதிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படும். கட்டட அமைப்பியல் பொறியாளர் பரிந்துரைத்த அள வில் அஸ்திவாரத்துக் கான பள்ளம் தோண்டப்பட வேண்டும். அஸ்திவார பள்ளம்தோண்டும் போது, தரையில் குறிப்பிடப்படும் நீளம், அகலம் அதன் அடிப்பகுதியிலும் இருப்பதை உறுதி செய்வது அவசியம். இவ்வாறு பள்ளம் தோண்டும் போது பாறைகள் இருந்தால், அதை அகற்ற வேண்டியது அவசியமாகிறது.

அதே சமயம் அஸ்திவார பள்ளத்தில் பாறைகளை அகற்றுவதால் அதன் உட்புற வடிவம் சீரற்ற நிலைக்கு தள்ளப்படும். இவ்வாறு உட்புறத்தில் அதிக அகலம் ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கான நடவடிக்கையாக தடுப்புகளை அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

கட்டடத்துக்கான அஸ்திவார பள்ளம் தோண்டும் போது அதில் ஈரப்பதம் என்னவாக இருக்கிறது என்பது முதல் பல்வேறு விஷயங்களை கவனிக்க வேண்டும். இந்த பள்ளத்தில் இருந்து வெளியே எடுக்கப்படும் மண்ணை மொத்தமாக அப்புறப் படுத்துவது நல்லது.

அஸ்திவார பள்ளத்தில் எடுக்கப்படும் மண் பக்கத்திலேயே குவித்து வைக்கப்படும் நிலையில், அங்கு பணியின் போது விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதே போன்று அஸ்திவார பள்ளத்தில் கான்கிரீட் பணிகள் முடிந்த நிலையில் முறையாக நீராற்ற வேண்டும்.

அதன் பின் அந்த பள்ளத்தில் உள்ள காலி இடத்தை கிராவல் மண் கொண்டு நிரப்புவது பாதுகாப்பான வழிமுறையாக பரிந்துரைக்கப்படுகிறது. இதில் பள்ளத்தில் எடுத்த மண்ணை மீண்டும் கொட்டுவதால் கட்டடத்தின் உறுதிக்கு பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

10 வ கை அஸ்திவார அமைப் புகள் ஸ் லாப் கிரேடு அஸ்திவாரம் 'T' வகை அஸ்திவாரம் டிரில்லிங் முறை அஸ்திவாரம் கிராவல் ஸ்பேஸ் அஸ்திவாரம் அடித்தள அஸ்திவாரம் பியர் பீம் அஸ்திவாரம் போஸ்ட் பிரேம் அஸ்திவாரம் மேட் ஸ்லாப் அஸ்திவாரம் ரப்பிள் டிரென்ச் அஸ்திவாரம் இன்சுலேட்டட் கான்கிரீட் அஸ் திவாரம்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us