Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பிரதமருடன் நவீன் சந்திப்பு

பிரதமருடன் நவீன் சந்திப்பு

பிரதமருடன் நவீன் சந்திப்பு

பிரதமருடன் நவீன் சந்திப்பு

ADDED : ஆக 23, 2010 10:47 PM


Google News
Latest Tamil News

புதுடில்லி:'ஒரிசாவில் தொழிற்துறை திட்டங்களை விரைந்து முடிக்க மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்' என, பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளதாக மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.தொழிற்துறை திட்டங்களை செயல்படுத்துவதில், ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் அரசு மெத்தனப்போக்கை கடைபிடிப்பதாக மத்திய அரசு குறை கூறியிருந்தது.

இந்த நிலையில் முதல்வர் நவீன் பட்நாயக் டில்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார்.



இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:பாஸ்கோ ஸ்டீல் மற்றும் வேதாந்தா சுரங்க திட்டப் பணிகளில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். அதன்பின், அந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த தேவையான சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.இதேபோன்று ஒரிசாவில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுக்க ஆந்திர மாநிலம், போலவரத்தில் அணைக்கட்டு கட்டுவது குறித்து பரிசீலனை செய்து ஆவன செய்யப்படும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.இவ்வாறு நவீன் பட்நாயக் தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us