Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அரசு திட்டங்களுக்கு நிலம்: மாயாவதி யோசனை

அரசு திட்டங்களுக்கு நிலம்: மாயாவதி யோசனை

அரசு திட்டங்களுக்கு நிலம்: மாயாவதி யோசனை

அரசு திட்டங்களுக்கு நிலம்: மாயாவதி யோசனை

ADDED : ஆக 23, 2010 10:46 PM


Google News
Latest Tamil News

லக்னோ:'நிலம் கையகப்படுத்துதல் தொ டர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்'என, உ.பி., முதல்வர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.உ.பி., முதல்வர் மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கை:நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என, விவசாயிகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.

இதை நான் ஆதரிக்கிறேன். இந்த சட்டத்தில் உள்ள சிறு, சிறு பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் விவசாயிகளின் கோரிக்கைக்கு எந்த பதிலும் கூறாமல், மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது.தொழில் அதிபர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. வரும் 26ம் தேதி, பார்லிமென்ட் முன் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும்.



சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் நாடு முழுவதும் 50 ஆயிரம் எக்டேர் விளைநிலங்களை, விவசாயிகளிடம் இருந்து கைப்பற்றி, தொழில் நிறுவனங்களிடம் மத்திய அரசு கொடுத்துள்ளது. மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கையால், ஏராளமான விவசாயிகள் வீதிகளுக்கு விரட்டப்பட்டுள்ளனர்.மேலும், வனத்துறைக்கு சொந்தமான நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு, தொழில் அதிபர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் பா.ஜ., தலைவர்கள் தேவையற்ற பேச்சுக்களை பேசி, நேரத்தை வீணடிக்காமல், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us