/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/விதிமுறைகளை மீறி இயக்கிய 40 ஷேர் ஆட்டோ பறிமுதல்விதிமுறைகளை மீறி இயக்கிய 40 ஷேர் ஆட்டோ பறிமுதல்
விதிமுறைகளை மீறி இயக்கிய 40 ஷேர் ஆட்டோ பறிமுதல்
விதிமுறைகளை மீறி இயக்கிய 40 ஷேர் ஆட்டோ பறிமுதல்
விதிமுறைகளை மீறி இயக்கிய 40 ஷேர் ஆட்டோ பறிமுதல்
ADDED : ஆக 23, 2010 01:17 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் நகரில் அரசு விதிகளை மீறி இயக்கப்பட்ட 40 ஷேர் ஆட்டோக்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரம்பலூர் நகரில் இயங்கி வரும் 3+1 மற்றும் 5+1 ஷேர் ஆட்டோக்களில் மூன்று தடவைக்கு மேல் விதிமுறைகளை மீறும் ஆட்டோக்களின் விபரம் தொடர்பான பதிவேடுகளை பராமரித்து கண்காணிக்கவும், அங்கீகாரம் பெறாத நிறுவனத்தின் ஆட்டோ ரிக்ஷாக்களின் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஓ.,வுக்கு, கலெக்டர் விஜயகுமார் உத்தரவிட்டார்.
ஆர்.டி.ஓ., சந்திரன் மேற்பார்வையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் சரவணபவன், பாபு மற்றும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி ஆகியோர் தலைமையில் நேற்று பெரம்பலூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், அதிக பயணிகளை ஏற்றுதல், ஆட்டோ ரிக்ஷா பதிவு செய்யாதது போன்ற அரசு விதிமுறை மீறி இயக்கப்பட்ட 3+1 ஷேர் ஆட்டோ 33, ஏழு 5+1 ஷேர் ஆட்டோ உட்பட 40 ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.


