Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று காலை சூரிய வழிபாடு துவக்கம்

காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று காலை சூரிய வழிபாடு துவக்கம்

காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று காலை சூரிய வழிபாடு துவக்கம்

காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று காலை சூரிய வழிபாடு துவக்கம்

ADDED : ஆக 23, 2010 01:24 AM


Google News

திருச்சி: திருச்சி மாவட்டம், சர்க்கார் பாளையம், ஸ்ரீ காசி விஸ்வநாத ஸ்வாமி கோவிலில், இன்று துவங்கி மூன்று நாட்களுக்கு சூரிய வழிபாடு நடக்கிறது.

திருச்சி-கல்லணை ரோடு, காவிரி தென்கரையிலுள்ள சர்க்கார் பாளையத்தில் கரிகால் சோழனால் கட்டப்பட்டபழமையான காசி விஸ்வநாத ஸ்வாமி கோவில் உள்ளது.

இக்கோவில் மூலவர் காசிவிஸ்வநாதர் சிவலிங்கத்தின் மீது ஆண்டுதோறும் ஆவணி மாதம் 7,8,9ம் தேதிகளில், அதிகாலையில் சூரியனின் கதிர்கள் நேரடியாகப்படுகின்றன. இந்நிகழ்வை சூரியவழிபாடு என்று புராணங்கள் கூறுகின்றன. அப்போது வழிபாடு நடத்தினால் நற்பலன்கள் கிடைக்கும். இந்தாண்டு சூரிய வழிபாடு இன்று துவங்குகிறது. காலையில் சூரிய உதயத்தில் துவங்கி, சூரிய ஒளி கோவிலில் முன் மண்டபம் வழியாக படிப்படியாக நகர்ந்து கருவறையில் உள்ள மூலவர் சிலையின் நெற்றிப்பொட்டில் திலகம் இட்டது போல ஜொலிக்கும். தொடர்ந்து மூன்று நாட்கள் சூரிய பூஜை நடக்கும். சூரிய வழிபாட்டில் பங்கேற்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பாலகுரு, சுந்தர மீனாட்சி, ராஜாராம் மற்றும் அர்ச்சகர்கள், உபயதாரர், பக்தர்கள் செய்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us