Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/கவனமாக இருந்தால்... கடிக்கலாம்... நொறுக்கலாம்!

கவனமாக இருந்தால்... கடிக்கலாம்... நொறுக்கலாம்!

கவனமாக இருந்தால்... கடிக்கலாம்... நொறுக்கலாம்!


PUBLISHED ON : மார் 22, 2026

Follow on Google

PUBLISHED ON : மார் 22, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதுமையில் மிக்சர், முறுக்கை, கடிக்க முடியாத ஏக்கம் இனி இல்லை. பல் செட் பொருத்தி எதையும் கடிக்கலாம்...நொறுக்கலாம் என்கிறார், அரசு மருத்துவமனை பல் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் ஜெய் கைலாஷ்.

அவருடன் ஒரு கலந்துரையாடல்...

முழுமையாகவோ அல்லது, குறிப்பிட்ட பல்லை மட்டும் தனியாக பொருத்தி கொள்ளவோ, மருத்துவ வசதிகள் வந்துவிட்டன. தனியாக பல் கட்டியிருந்தால் சிலர், அதை தேய்க்க பயந்து அப்படியே விட்டுவிடுவர்.

இதில் கிருமிகள் பரவி, வாய் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதனால் ஆண்டுக்கு ஒருமுறை, பல் மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும்.

பல் செட் என்பது நிரந்தர பற்கள் போன்றதல்ல. இதை பொருத்தி, 7 ஆண்டுகள் கழித்து, புதிதாக மாற்றுவது அவசியம்.

இதை செய்யாமல் விட்டுவிட்டால், ஈறுகளின் அடியில் வளரும் எலும்புகள் தேய்மானம் அடையும். புண் ஏற்படலாம். நீண்ட கால புண் புற்றுநோயாக மாறலாம்.

வயதானவர்களுக்கு பற்கள் தேய்ந்து கூர்மையாக மாறிவிடும். அது கன்னங்களின் ஓரங்களில் குத்தி காயம் ஏற்படுத்தலாம்.

அது ஆறாமல் இருந்தால், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். பல் தானே என, அலட்சியமாக இருக்காமல், வலி ஏற்பட்டால், மருத்துவரை அணுக வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us