Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/டாக்டரைக் கேளுங்கள்

டாக்டரைக் கேளுங்கள்

டாக்டரைக் கேளுங்கள்


PUBLISHED ON : மார் 29, 2026

Follow on Google

PUBLISHED ON : மார் 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அஞ்சலி, மதுரை: எனது கணவர் எப்போதும் புகைபிடிக்கிறார். இதனால் எங்கள் குடும்பத்திற்கு பாதிப்பு உண்டா?

உங்கள் வீட்டினுள் அல்லது உங்களது குடும்பத்தார் அருகில் இருக்கும் போது சிகரெட் புகைத்தால் அந்த புகையின் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும். உங்கள் கணவர் தொடர்ந்து புகைபிடிக்கும் போது அவருக்கு நுரையீரல் நோய், இதயநோய் பாதிப்பு வர வாய்ப்பு உண்டு. வீட்டினுள், வீட்டின் சுற்றுப்புறத்தில் புகைபிடிக்கும் போது அப்புகை, நச்சுக்காற்று காற்றினுள் கலந்து அக்காற்றை நீங்கள் சுவாசிக்கும் போது, குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு வரலாம். இதை இரண்டாம் நிலை ஸ்மோக்கிங், சுற்றுச்சூழலால் வரும் புகைபாதிப்பு என்கிறோம். சமீபகாலமாக இந்த பாதிப்புகளால் நோய்கள் அதிகமாக கண்டறியப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள் அதிக பாதிப்பிற்குள்ளாகலாம்.

- டாக்டர் பி.பிரேம் ஆனந்த், நுரையீரல் நோய் சிறப்பு நிபுணர், மதுரை

ராகசுதா, நத்தம்: எனக்கு சொத்தைப்பல் பாதிப்பு ஏற்பட்டு வலி அதிகமாக உள்ளது. இது எதனால் வருகிறது?

வாயில் உள்ள பாக்டீரியாக்கள் சர்க்கரை உணவுகளை அமிலமாக மாற்றி பல்லின் எனாமல் பகுதியை அரிப்பதினால் ஏற்படுகிறது. சரியாக பல் துலக்காதது, இனிப்பு, மாவுச்சத்து உணவுகளை அதிகம் உட்கொள்வது, வாயில் பிளேக் எனும் கிருமிப் படலம் தங்குவதால் பற்களில் குழி விழுந்து சொத்தை உருவாகிறது. இனிப்புகள், குளிர்பானங்கள், ஒட்டும் தன்மை உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வது, கிருமிகள், எச்சில், உணவுத்துகள்கள் சேர்ந்து மெல்லிய, ஒட்டும் படலமாக மாறி பற்களை சிதைக்கிறது. போதுமான உமிழ்நீர் இல்லாமையால் உணவை சுத்தம் செய்ய முடியாமல் கிருமிகள் பல்லில் ஒட்டி சொத்தையை ஏற்படுத்துகிறது. சொத்தைப்பல் வராமல் தடுக்க தினமும் இருவேளை பல் துலக்க வேண்டும். 6 மாதங்களுக்கு ஒருமுறை பல் பரிசோதனை செய்வது நல்லது.

- டாக்டர் கவுதம் செந்தில், நத்தம்

க.சண்முகப்பிரியா, சிவகங்கை: தைராய்டு பாதிப்பால் உடலில் ஏற்படும் மாற்றங்களை எவ்வாறு சரி செய்ய முடியும்?

தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி போன்று இருக்கும் ஒரு சிறிய சுரப்பி. இது சிறியதாக இருந்தாலும் நம் உடல் சீராக இயங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது நமது வளர் சிதை மாற்றம், ஆற்றல் அளவு, இதயத் துடிப்பு, உடல் வெப்பம் மற்றும் முழுமையான வளர்ச்சியைப் பராமரிக்கத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

இந்தச் சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்றால் அதன் பாதிப்பை உடல் முழுவதும் உணர முடியும். பெண்களுக்கு வயது அதிகரிக்கும் போது தைராய்டு கோளாறுகளும் அதிகரிக்கின்றன. 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களிடம் 0.7 சதவீதமாக இருக்கும் பாதிப்பு, 35 முதல் 49 வயதுடையவர்களிடம் 3.4 சதவீதமாக உயர்கிறது. 35 வயதுக்கு மேல் பெண்கள் தைராய்டு பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அயோடின், செலினியம், துத்தநாகம் நிறைந்த சத்தான உணவை உட்கொள்ளுங்கள். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். போதுமான துாக்கம் அவசியமாகும்.

- டாக்டர் மு.தென்றல், மகப்பேறு மருத்துவர், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சிவகங்கை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap