Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/வலிக்கு இதம் தரும் இருள்

வலிக்கு இதம் தரும் இருள்

வலிக்கு இதம் தரும் இருள்


PUBLISHED ON : ஜூலை 21, 2024

Follow on Google

PUBLISHED ON : ஜூலை 21, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி, நரம்பியல் கோளாறு, வலி துவங்குவதற்கு முன்பே, கண் பார்வையில் மாற்றங்கள், பின் கழுத்து வலி, உடல் சோர்வு, மந்தமான பேச்சு, வாசனை இழப்பு போன்ற அறிகுறிகளாக வெளிப்படும்.

ஒற்றைத் தலைவலிக்கான அறிவியல் பூர்வமான காரணம் தெரியவில்லை என்றாலும், அவை மூளையில் சுரக்கும் செரோடோனின் என்ற ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

மைக்ரேன் தலைவலி ஆண்களை விட பெண்களை தான் அதிகம் பாதிக்கிறது. ஒற்றைத் தலைவலி கிளாசிக் மைக்ரேன் மற்றும் பொதுவான ஒற்றைத் தலைவலி என்று இரு வகைப்படும்.

ஒற்றைத் தலைவலியில் குமட்டல், வாந்தி, ஒளி, சத்தத்திற்கு சகிப்புத்தன்மை குறைதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இருட்டு அறை, அமைதியான சூழலுக்கு மனம் ஏங்கும். கழுத்து வலி, குனிந்தாலும், நின்றாலும் தாங்க முடியாத தலைவலியை ஏற்படுத்தும். கண்கள் சிவந்து காணப்படும்.

தலைவலி ஒருபக்கமாகவோ, இருபக்கமாகவோ இருக்கும்.அதீத வெளிச்சம் தலைவலியைக் கொடுப்பதால், கதவை மூடிக்கொண்டு விளக்குகளை அணைத்துவிட்டு, ஒரு போர்வை போர்த்திக்கொண்டு படுத்துக் கொள்வர். இருள் இதமாக இருக்கும்.

காரணம், செரோடோன் பற்றாக்குறையினால், மூளையில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் தடைபட்டு, அழற்சி ஏற்படுகிறது.

அதிக சூரிய வெப்பம், காற்றோட்டம் இல்லாத அறைகளில் தங்குவது, இரவில் அதிக நேரம் கண் விழித்து டிவி, மொபைல் பார்ப்பது மூளையை பாதிக்கும். மது, இறைச்சி, துரித உணவு, குளிர்பானங்கள், சைனஸ் தொற்று, பதற்றம், மனச் சோர்வு, மாதவிடாய், கருத்தடை மருந்துகள் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தலாம்.

உடற்பயிற்சி செய்யும்போது செரடோனின் அதிகம் சுரந்து, மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும். தினசரி வேலைகளில் பாதிப்பு ஏற்படும் அளவிற்கு ஒற்றைத் தலைவலி இருந்தால், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

இயற்கை மருத்துவ முறைகளில் அக்குபங்க்சர், வாசனை எண்ணெய் மசாஜ், வண்ண சிகிச்சை, யோகா, மூச்சு பயிற்சி, நீர் சிகிச்சை போன்றவை நல்ல பலன் தரும்.

இயற்கை மற்றும் யோகா மருத்துவரின் ஆலோசனைப் பெற்று தினசரி ஒரு மணி நேரம் இப்பயிற்சிகளை செய்யலாம். தினசரி உணவில் காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.



டாக்டர் ப. ராகுல்,

இயற்கை மற்றும் யோகா மருத்துவர்,

சஞ்சீவினி லைப்ஸ்டைல் கிளினிக், உளுந்துார்பேட்டை.94870 38838

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap