Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/வாழும் வரை வலி இல்லாமல் வாழலாம்!

வாழும் வரை வலி இல்லாமல் வாழலாம்!

வாழும் வரை வலி இல்லாமல் வாழலாம்!


PUBLISHED ON : மே 10, 2026

Follow on Google

PUBLISHED ON : மே 10, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமீபத்தில் டிமென்ஷியா என்கிற மறதி நோய் பாதித்த நோயாளி வந்தார். மறதியுடன் சேர்த்து, சிறுநீரக செயலிழப்பு, பார்க்கின்சன்ஸ் என்று வேறு பல நோய்களும் அவருக்கு இருந்தது. அவரின் குழந்தைகள் யாரும் அவருடன் இல்லை. ஒரு கட்டத்தில், தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை.

'பேலியேடிவ் கேர்' சிகிச்சையில் சேர்ந்தார். அவரின் உடல், மனப் பிரச்னைகளுக்கு ஆதரவு தந்து, கடைசி வரை பார்த்துக் கொண்டோம்.

சிறுநீர் பையில் கேன்சர் பாதித்த நபர், தீவிர வலியுடன் வந்தார். அவருக்கு தேவையான ஆதரவு மற்றும் சிகிச்சை கொடுத்த போது, நல்ல முன்னேற்றம் தெரிந்தது. தன் தேவைகளை அவரே கவனித்துக் கொண்டார். ஆதரவு தேவைப்பட்டால் வாருங்கள் என்று வீட்டிற்கு அனுப்பி விட்டோம்.

வலியில் இருந்து நிவாரணம் பெற்றாலே போதும். முன்னேற்றம் தெரியும்.

சிகிச்சையில், குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் நோய் குணமடைய வாய்ப்பில்லை என்றால், இனி எதுவும் செய்ய முடியாது, வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று டாக்டர்கள் சொல்லிவிடுவர்.

இப்படியான நிலையில், அடுத்து என்ன என்ற குழப்பம், பயம், வலியால் இப்படி சிரமப்படுகிறாரே என்ற குற்ற உணர்வு, நெருங்கிய சொந்தங்களுக்கு ஏற்படும். குணப் படுத்த முடியாத நோய்களுக்கு வலி நிவாரணமும், அரவணைப்பும் அளிப்பது தான் 'பேலியேடிவ் கேர்' எனப்படும் ஆதரவு சிகிச்சை.

முற்றிய நிலையில் கேன் சராக இருக்கலாம். நுரையீரல் செயலிழப்பு, இதய நோ ய்கள், சிறுநீரகக் கோளாறுகள் என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

நோயாளிக்கு வழக்கமான சிகிச்சை தந்தாலும், அதையும் மீறி வலி, சுவாசிப்பதில் சிரமம், குமட்டல், வாந்தி என்று சிகிச்சையால் பல பக்க விளைவுகள் ஏற்படலாம்.

நர்சிங் கேர், பிசியோதெரபி, உணர்வுபூர்வமான ஆதரவு உட்பட தினசரி வாழ்க்கைக்கு என்ன வெல்லாம் தேவையோ, அதை எல்லாம் நாங்களே செய்வோம். மனநல ஆ லோசகர்கள் நேரில் 'கவுன்சிலிங்' தருவர். நீண்ட நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெறும் போது, என்ன நடக்கிறது, எப்போது சிகிச்சை முடியும் என்பது தெரியாது. பேலியேடிவ் சிறப்பு டாக்டர்கள், நோயின் தன்மை, செய்ய வேண்டியது என்று யதார்த்த நிலையை விளக்குவர்.

மொத்தத்தில், நோயாளி உயிருடன் இருக்கும் வரை, எந்த அசவுகரியமும் இன்றி, நிம்மதியாக வாழ வைப்பது தான் பேலியேடிவ் கேர்.



டாக்டர் அவினாஷ். ஈ

தலைவர், பேலியேடிவ் கேர் சிகிச்சைப் பிரிவு,

சென்னை யூராலஜி அண்டு ரோபோடிக்ஸ் இன்ஸ்டிடியூட்,

சென்னை.

95001 18989


dr.avinashrajan@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap