Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/நிஜக்கதை/ எந்திரம் ஆண் பெண் பேதம் பார்க்காது திறமையைத்தான் மதிக்கும்

எந்திரம் ஆண் பெண் பேதம் பார்க்காது திறமையைத்தான் மதிக்கும்

எந்திரம் ஆண் பெண் பேதம் பார்க்காது திறமையைத்தான் மதிக்கும்

எந்திரம் ஆண் பெண் பேதம் பார்க்காது திறமையைத்தான் மதிக்கும்

PUBLISHED ON : செப் 26, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
எந்திரம் ஆண் பெண் பேதம் பார்க்காது திறமையைத்தான் மதிக்கும்நாட்டின் முதல் பெண் ரயில் டிரைவர் சுரேகா யாதவ்.

சுரேகா யாதவ், ஆசியாவின் முதல் பெண் ரயில்வே லோகோபைலட், 1965 செப்டம்பர் 2-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா நகரில் பிறந்தார். அவரது தந்தை ராம்சந்திரா போசாலே, விவசாயி; தாய் சோனாபாய். அவரது குடும்பம் விவசாயத்தைச் சார்ந்தது.

சுரேகா, சதாரா நகரில் உள்ள பள்ளி கல்வி முடித்தார். பிறகு, சதாரா மாவட்டத்தில் உள்ள கராத் நகரில் பொறியியலில் டிப்ளோமா படித்தார்.Image 1474435Image 1986-ஆம் ஆண்டு, இந்திய ரயில்வேயில் உதவி இயக்குனராக சேர்ந்து, 1988-ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் பெண் ரயில்வே லோகோபைலட்டாகப் பதவி உயர்வு பெற்றார். அவர் 2000-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரை மும்பை மண்டலத்தில் உள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரயில்வே நிலையங்களில் பெண் பயணிகள் ரயில்களை இயக்கினார். 2010-ஆம் ஆண்டு, அவர் மூத்த லோகோபைல்ட் பதவிக்கு பதவி உயர்வு பெற்றார்.

2011-ஆம் ஆண்டு, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ஆம் தேதி, டெக்கன் குயின் ரயிலில் பெண் இயக்குனராகப் பணியாற்றி, ஆசியாவின் முதல் பெண் ரயில்வே லோகோபைல்டாகப் புகழ்பெற்றார். அவரது சாதனை, பெண்கள் ரயில்வே துறையில் முன்னேற்றம் அடைய முடியும் என்பதை நிரூபித்தது.

சுரேகா யாதவ், 1990-ஆம் ஆண்டு, காவல்துறையில் பணியாற்றும் சங்கர் யாதவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.Image 1474436சுரேகா யாதவ், தன் 36 ஆண்டு ரயில்வே சேவையில், பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அந்தவகையில், 'ஜிஜாவ் பரஸ்கார்' (1998), 'மகளிர் சாதனையாளர்கள் விருது' (2001), 'லோக்மட் சகி மஞ்ச் விருது' (2002), 'பிரேரணா பரஸ்கார்' (2005), 'ஜி.எம். விருது' (2011), 'முதலாவது பெண் லோகோபைல்ட் விருது' (2013) போன்றவை குறிப்பிடத்தக்கவை.

சுரேகா யாதவ், தனது சாதனைகளால், இந்திய ரயில்வே துறையில் பெண்கள் முன்னேற்றத்திற்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார்.சுரேகா யாதவ், தனது 36 ஆண்டுகள் நீடித்த பணியின்போது, பெண்கள் ரயில்வே துறையில் முன்னணி இடத்தைப் பிடிக்க முடியும் என்பதை நிரூபித்தார். அவரது சாதனைகள், பெண்களுக்கு தொழில்முனைவோராகவும், சமூக முன்னேற்றத்திற்கான முன்னணி வீரர்களாகவும் செயல்பட ஊக்கமளிக்கின்றன.

இந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் இவர் கூறுகையில் ,'ஒரு இயந்திரம் பாலினத்தைப் புரிந்துகொள்ளாது; அது இயக்குபவரின் திறமை மற்றும் உறுதியை மட்டுமே மதிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்,உண்மைதானே அதற்கு சாட்சியமே அவர்தான்.

-எல்.முருகராஜ்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us