தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மனம் குவியும் இசை: ஆம்ளிஃபையர்

மனம் குவியும் இசை: ஆம்ளிஃபையர்

மனம் குவியும் இசை: ஆம்ளிஃபையர்


PUBLISHED ON : ஏப் 21, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 21, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இசைத்துறையில் இன்றியமையாத மின்னணு சாதனங்களுள் ஒன்று ஆம்ளிஃபையர். தொலைக்காட்சி, ரேடியோ, ஹோம் தியேட்டர் செளண்ட் சிஸ்டம், மடிக்கணினி, டேப்லெட், அலைபேசி உள்ளிட்ட பல மின்னணு சாதனங்களில் ஆம்ளிஃபையர் ஒலியை அதிகரிக்கவும் குறைக்கவும் உதவுகிறது. இசைத்துறையில் ஆம்ளிஃபையரின் பங்கு குறித்துத் தெரிந்துகொள்வோமா?

* வோல்டேஜ், கரன்ட்டின் வீரியத்தை ஏற்றி இறக்கவும் மின் சிக்னல் ஆற்றலை மாற்றியமைக்கவும் உதவும் மின்னணு சாதனம் ஆம்ளிஃபையர்.

* 1906ஆம் ஆண்டு அமெரிக்க மின்னணு விஞ்ஞானிலீ டீ ஃபாரஸ்ட் கண்டுபிடித்த 'டிரியோட் வேக்யூம் டியூப்' தான் உலகின் முதல் ஆம்ளிஃபையர்.

* பாடல்பதிவு ஸ்டுடியோக்கள், மேடை இசை நிகழ்ச்சிகளில் பல்வேறு நாப்கள் கொண்ட ராட்சத ஆம்ளிஃபையர்கள் பயன்படுகின்றன.

* எலெக்ட்ரிக் கிதார், எலெக்ட்ரிக் வயலின், மிடி, சிந்தசைஸர் கீபோர்டு, எலெக்ட்ரிக் டிரம்ஸ் உள்ளிட்ட தாள வாத்தியங்களுடன் ஆம்ளிஃபையர் இணைக்கப்பட்டு அவற்றின் ஒலி அதிகரிக்கப்படும்.

* ரேடியோ, தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகள், தனியார் டிஜே பார்ட்டிகள் ஆகியவற்றில் ஆம்ளிஃபையர் முக்கிய பங்காற்றுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us