Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

PUBLISHED ON : ஜன 13, 2025


Google News
Latest Tamil News
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1. அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப், எந்த அமெரிக்க நாட்டை, அமெரிக்காவின் 51வது மாகாணமாகச் சேர்க்க வேண்டும் எனக் கூறி வருகிறார்?

அ. மெக்சிகோ

ஆ. பிரேசில்

இ. பொலிவியா

ஈ. கனடா

2. தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவிலேயே முதன்முறையாக எந்த மாநிலத்தில், ரூ.1.85 லட்சம் கோடி மதிப்பில், பசுமை ஹைட்ரஜன் மையம் அமைகிறது?

அ. தமிழகம்

ஆ. மஹாராஷ்டிரம்

இ. ஆந்திரம்

ஈ. குஜராத்

3. உலக வைர சந்தையில், ரஷ்யா தொடர்ந்து முதலிடம் வகிக்கும் நிலையில், எந்த நாட்டைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது?

அ. ஜப்பான்

ஆ. சீனா

இ. ஈரான்

ஈ. பாகிஸ்தான்

4. 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் உதவியை, மாநில போலீஸ் மற்றும் பிற விசாரணை அமைப்புகள் உடனடியாகப் பெறும் வகையில் புதிய இணையதள வசதி, இந்திய சி.பி.ஐ. சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் பெயர் என்ன?

அ. பாரத்போல்

ஆ. ஆக் ஷன்போல்

இ. போலீஸ்போல்

ஈ. இன்வெஸ்டிகேஷன்

5. தமிழக தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் மொத்தம் எத்தனை கோடி வாக்காளர்கள் உள்ளனர்?

அ. 5.36 கோடி

ஆ. 6.36 கோடி

இ. 7.23 கோடி

ஈ. 8.20 கோடி

6. தமிழக சட்டசபை தொகுதிகளில், விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ள தொகுதி எது?

அ. மணப்பாறை

ஆ. திருப்பத்தூர்

இ. ஈரோடு கிழக்கு

ஈ. வேலூர் புறநகர்

7. இந்தியாவில் முதன்முறையாக, டில்லியில் நடக்கவுள்ள, 'கோகோ' உலகக் கோப்பை தொடரில், இந்திய ஆண்கள், பெண்கள் அணிகளின் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டு உள்ளவர்கள்?

அ. பிரதீக் வைக்கார், பிரியங்கா இங்லே

ஆ. பிரபானி சபர், அஷ்வினி ஷிண்டே

இ. ராம்ஜி காஷ்யப், ரேஷ்மா ரத்தோர்

ஈ. ஆகாஷ்குமார், நீத்தா தேவி

8. உலகிலேயே அதிக ஊதியம் (ஆண்டுக்கு ரூ.17,000 கோடி) பெறும் ஊழியராக அறியப்படும் இந்தியரான ஜக்தீப் சிங், எந்த நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணிபுரிந்து, தற்போது இயக்குநர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளார்?

அ. இன்ஃபோசிஸ், இந்தியா

ஆ. குவான்டம்ஸ்கேப், அமெரிக்கா

இ. டென்சென்ட், சீனா

ஈ. டட்னெஃப்ட், ரஷ்யா

விடைகள்: 1. ஈ, 2. இ, 3. ஆ, 4. அ, 5. ஆ, 6. இ, 7. அ. 8. ஆ,




      Our Apps Available On




      Dinamalar

      Follow us