Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : மே 11, 2026

Follow on Google

PUBLISHED ON : மே 11, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.

1. தென்கிழக்கு ஆசியாவின் எந்த நாட்டுடன் வர்த்தகம், பாதுகாப்பு, அரிய வகை கனிம வளங்கள் உள்ளிட்ட துறைகளில், 3 முக்கிய ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?

அ. தாய்லாந்து

ஆ. மியான்மர்

இ. வியட்நாம்

ஈ. மலேசியா

2. எந்தப் பாடலுக்கு நம் தேசிய கீதமான 'ஜன கண மன'விற்கு இணையான அந்தஸ்து வழங்கும்

முன்மொழிவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?


அ. வந்தே மாதரம்

ஆ. சாரே ஜஹான் சே அச்சா

இ. மா துஜே சலாம்

ஈ. பாரத சமுதாயம் வாழ்கவே

3. துருக்கியில் நடந்த ஜூனியர் உலகப் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான 71 கிலோ பிரிவில், அனைத்துப் பிரிவுகளிலும் ஒட்டுமொத்தமாக, 309 கிலோ எடைகளைத் தூக்கி, வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர்?

அ. ரஞ்சித்

ஆ.மகேஷ்

இ. யாஷ்

ஈ. குகன்

4. சென்னை ஐ.ஐ.டி.யின் தொழில்நுட்பத்துடன் உருவான, 'கேலக்ஸ்-ஐ' எனும் விண்வெளி துறையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், உலகிலேயே முதல் ரேடார் மற்றும் கேமராவை இணைத்த, எத்தகைய தொழில்நுட்பம் கொண்ட செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியுள்ளது?

அ. ஜி-சாட்

ஆ. கார்டோசாட்

இ. ஆப்டோசார்

ஈ. கல்பனா - 1

5. ராணுவத் துறையில் அசுர வளர்ச்சி கண்டு வரும் எந்த நாடு, 6,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும், கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணையை அறிமுகப்படுத்தி உள்ளது?

அ. ரஷ்யா

ஆ. துருக்கி

இ. அமெரிக்கா

ஈ. இந்தியா

விடைகள்: 1. இ, 2. அ, 3. இ, 4. இ, 5.ஆ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us