தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : மே 25, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 25, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.

1. பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், கடந்த ஆண்டை விட, 0.51 சதவீதம் பேர் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றதால், இந்தாண்டு தேர்ச்சி எத்தனை சதவீதமாக உயர்ந்துள்ளது?

அ. 96.95

ஆ. 93.26

இ. 94.31

ஈ. 95.04

2. உலகின் எந்த நாட்டில் உள்ள, பிராட் குரூப் ஹோலன் எனும் கட்டுமான நிறுவனம், அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன், 100 தொழிலாளர்களை மட்டுமே வைத்து, ஐந்தே நாளில் 26 மாடி கட்டடத்தைக் கட்டி முடித்து, உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது?



அ. சீனா

ஆ. ஜப்பான்

இ. ரஷ்யா

ஈ. அமெரிக்கா

3. இந்திய ராணுவத்தின் திறனை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்காவிடம் இருந்து ரூ.4,100 கோடிக்கு, எந்த ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் பீரங்கிகளுக்கான உதிரி பாகங்கள் பெறுவதற்கான ஒப்பந்தங்களை, இரு நாடுகளும் இறுதி செய்துள்ளன?

அ. சினூக், டி90 பீஷ்மா

ஆ. துருவ், அர்ஜுன் எம்கே

இ. ருத்ரா, தனுஷ்

ஈ. அப்பாச்சி, எம் 777

4. நெதர்லாந்து லெய்டன் பல்கலைக்கழகத்தில், 300 ஆண்டுகளாகக் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்த, தமிழகத்தின் வரலாற்று பொக்கிஷமான ஆனைமங்கலம்.............. மத்திய அரசின் நடவடிக்கையால் இந்தியாவுக்குத் திரும்பி வர உள்ளது.

அ. தாழி

ஆ. ஓவியம்

இ. செப்பேடு

ஈ. ஆபரணம்

5. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவரான யார், கேரள முதல்வராகப் பொறுப்பேற்று உள்ளார்?

அ. வி.டி.சதீஷன்

ஆ. ரமேஷ் சென்னிதலா

இ. கே.முரளீதரன்

ஈ. சன்னி ஜோசப்

விடைகள்: 1. இ, 2. அ, 3. ஈ, 4. இ, 5. அ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us