PUBLISHED ON : ஜூன் 08, 2026

நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. நாடு முழுவதும், உயர் நீதிமன்றங்களில் விசாரணை முடிந்து ஒத்திவைக்கப்பட்ட வழக்குகளில், எத்தனை மாதங்களுக்குள் கட்டாயம் தீர்ப்பு வழங்க வேண்டும் என, தன் உச்சபட்ச அதிகாரமான, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது?
அ. இரண்டு
ஆ. மூன்று
இ. நான்கு
ஈ. ஐந்து
2. 'இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும், அதிகார சமநிலையையும் ராணுவம் மிக முக்கியத் தூணாக விளக்குகிறது' என, எந்த நாட்டின் ராணுவ அமைச்சரான பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்?
அ. ஈரான்
ஆ. ரஷ்யா
இ. சீனா
ஈ. அமெரிக்கா
3. தென்கிழக்கு ஆசியாவில், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அதன் அண்டை நாடான எது, அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்கான போட்டுள்ளது?
அ. வியட்நாம்
ஆ. மியான்மர்
இ. தாய்லாந்து
ஈ. கம்போடியா
4. திருச்சி மாவட்டம், லால்குடிக்கு அருகில் உள்ள தின்னகுளம் கிராமத்தில், எந்த மன்னரின் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது?
அ. குலோத்துங்க சோழன்
ஆ. விக்கிரம சோழன்
இ. கரிகால் சோழன்
ஈ. ஆதித்த சோழன்
5. சமீபத்தில் நடந்த நார்வே செஸ் தொடரில், உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சனை, இந்தியாவின் பிரக்யானந்தா தோற்கடித்தார். இதன்மூலம், நார்வே செஸ் தொடர்களில் இதுவரை, பிரக்யானந்தா எத்தனை முறை, கார்ல்சனை வீழ்த்தியுள்ளார்?
அ. ஒன்றாவது
ஆ. இரண்டாவது
இ. மூன்றாவது
ஈ. நான்காவது
விடை: 1.ஆ, 2. ஈ, 3. அ, 4. ஆ, 5.ஆ





