தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/காலக் கண்ணாடி: வரலாற்று வழித்தடங்கள்

காலக் கண்ணாடி: வரலாற்று வழித்தடங்கள்

காலக் கண்ணாடி: வரலாற்று வழித்தடங்கள்


PUBLISHED ON : மார் 09, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 09, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. ஆசியாவையும், ஐரோப்பாவையும், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளையும் இணைத்து, சீனா முதல் ஐரோப்பா வரை அமைக்கப்பட்ட மாபெரும் வர்த்தகப் பாதையின் பெயர் என்ன?

2. பிரிட்டனில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட உலகின் முதல் நீராவி ரயில் பாதை எது?

3. ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான கடல்வழிப் பயண தூரத்தைக் குறைத்த செயற்கை கால்வாய் பாதை எது?

4. மத்திய ஆசியப் பகுதிகளைக் கைப்பற்றவும், அங்கு பொருளாதார ஆதிக்கத்தைச் செலுத்தவும் ரஷ்யா உருவாக்கிய ரயில் பாதை எது?

5. அட்லான்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைப்பதன் மூலம், அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு இடையிலான கடல்வழிப் பயணத்தை எளிதாக்கிய பாதை எது?

6. ஆங்கிலக் கால்வாயின் (English Channel) அடியில் அமைக்கப்பட்ட, பிரிட்டனையும் பிரான்ஸையும் இணைக்கும் சுரங்க ரயில் பாதை எது?

விடைகள்:

1. பட்டுப் பாதை (Silk Road) (பொ.யு.மு. 2-ஆம் நூற்றாண்டு)

2. ஸ்டாக்டன் - டார்லிங்டன் ரயில் பாதை (பொ.யு. 1825)

3. சூயஸ் கால்வாய் (Suez Canal) (1869)

4. டிரான்ஸ்-காஸ்பியன் ரயில் பாதை (1870 - 1880)

5. பனாமா கால்வாய் (Panama Canal)a (1914)

6. சேனல் டன்னல் (Channel Tunnel) (1994)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us