Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பொக்கிஷம்/சென்னை பேனா கண்காட்சி

சென்னை பேனா கண்காட்சி

சென்னை பேனா கண்காட்சி

சென்னை பேனா கண்காட்சி

PUBLISHED ON : மார் 06, 2026 10:20 PM


Google News
Latest Tamil News
சென்னை பேனா கண்காட்சி சென்னை அடையாறில் உள்ள 'ஃபிகா' அரங்கில் நடைபெறுகிறது.

எழுத்து ஆர்வலர்கள், சேகரிப்பாளர்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த பேனா நிறுவனங்களை இந்த கண்காட்சி ஒன்றினைக்கிறது.Image 1545262கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் 16,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதன் மூலம், வரலாற்றில் அதுவரை முதலிடத்தில் இருந்த 'வாஷிங்டன் டிசி பேனா கண்காட்சி'யைப் பின்னுக்குத் தள்ளி, உலகிலேயே அதிக மக்கள் வருகை தந்த பேனா கண்காட்சி என்ற பெருமையை சென்னை பேனா கண்காட்சி பெற்றது. இந்த ஆண்டு, அதிக கண்காட்சியாளர்கள் மற்றும் சர்வதேச பிராண்டுகளுடன் இந்த நிகழ்ச்சி இன்னும் பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.Image 1545263இந்த கண்காட்சியில் இந்தியாவின் பெருமைமிக்க ரங்கா பென்ஸ் , எண்ட்லெஸ், சுலேகா முதல், உலகப் புகழ்பெற்ற ஷாஃபர் , பெலிகன் , டிப்ளமேட் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளது.ஹாரி பாட்டர் காமிக்சில் வரும் இறகு தொட்டு எழுதும் பேனாவை பார்ப்பதிலும் வாங்குவதிலும் சிறுவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.Image 1545264டி முறையில் அச்சிடப்பட்ட உலகின் மிகப்பெரிய மை புட்டி மற்றும் பவுண்டன் பேனா ஆகியவை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.பிரீமியம் ரக பேனாக்கள் மற்றும் தனித்துவமான பிராண்டுகளை நெருக்கமாகக் கண்டு ரசிப்பதற்கென பிரத்யேகமாக கடைகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.கண்காட்சியல் உள்ள பேனாக்கள் விற்பனையும் செய்யப்படுகிறது.ரூ80 ரூபாய் முதல் ரூ 8 லட்சம் வரையிலான மதிப்புடைய பேனாக்கள், மைகள் மற்றும் இதர உபகரணங்கள் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும்.எட்டு லட்ச ரூபாய்க்கான பேனா 47 வைரங்கள் பதிக்கப்பட்டு கண்ணாடிப் பேழைக்குள் மின்னியபடி காட்சி தருகிறது.Image 1545265அனுமதி இலவசம் பார்வை நேரம்: மதியம் 2:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை எழுத்துக் கலையை வளர்ப்பதற்காகச் சென்னையிலிருந்து செயல்படும் 'எண்ட்லெஸ்' நிறுவனம் இக்கண்காட்சியை ஒருங்கிணைத்துள்ளது.Image 1545266-எல்.முருகராஜ்படங்கள்:யுவராஜ்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us