sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பொக்கிஷம்/சிலிண்டர் வேட்டை

சிலிண்டர் வேட்டை

சிலிண்டர் வேட்டை


PUBLISHED ON : மார் 11, 2026 05:08 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2026 05:08 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றைய தேதியில் தேசத்தின் தேசியப் பிரச்சினை எதுவென்று கேட்டால், எல்லைப் பாதுகாப்பு அல்ல; அது சமையல் எரிவாயு உருளைக்கான தட்டுப்பாடுதான். பாரத தேசமே ஒரு சிலிண்டருக்காக வீதியில் இறங்கி அலைபாய்கிறது.Image 1547489என்ன மாயமோ, என்ன மந்திரமோ தெரியவில்லை! ஊரில் உள்ள அத்தனை பேர் வீட்டு அடுப்பும் ஒரே நாளில் 'புஸ்'ஸென்று அணைந்துவிட்டதைப் போல, காஸ் ஏஜென்சி வாசல்களில் மக்கள் தவம் கிடக்கிறார்கள். அந்த வரிசையைப் பார்த்தால் திருப்பதி ஏழுமலையான் தரிசனமே தோற்றுவிடும் போலிருக்கிறது.Image 1547490'சிலிண்டர் இல்லாமல் வீட்டுப் படி ஏறினால் சோறு கிடையாது' என்று இல்லத்தரசிகள் 'அன்புக் கட்டளை' இட்டுவிட்டார்கள் போலும்! பாவம் ஆண்கள், அலுவலகத்திற்கு விடுமுறை போட்டுவிட்டு, சைக்கிளிலும் ஸ்கூட்டரிலும் காலி சிலிண்டரை வைத்துக்கொண்டு அலைவதைப் பார்த்தால் கல்நெஞ்சும் கரையும்.Image 1547488அதிர்ஷ்டவசமாக ஒரு சிலிண்டர் கிடைத்துவிட்டால், ஏதோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது போன்ற பெருமிதத்தோடு அதை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். போகிற வழியில் எவனாவது தட்டிப்பறித்துச் சென்றுவிடுவானோ என்கிற பயத்தில், அந்த இரும்பு உருளைக்கு கனத்த சங்கிலி போட்டு, 'லாக்கரில்' வைப்பது போலப் பூட்டுப்போடடு பாதுகாக்கின்றனர்.

தங்கம் விலை உயர்ந்ததை விட இந்த இரண்டே நாளில் சிலிண்டர் விலை கருப்பு சந்தையில் ஜெட் வேகத்தில் விர்ரென்று உயர்ந்து கொண்டு போகிறதுImage 1547486இந்தப் பிரச்சினைக்கு இப்போதைக்கு விடிவுகாலம் பிறக்காது என்று முடிவு செய்த சில இல்லத்தரசிகள், 'அம்மா காலத்து விறகு அடுப்பே மேல்' என்று அடுப்புக்கரியோடு மல்லுக்கட்டத் தொடங்கிவிட்டார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட இயற்கை உணவுப் பிரியர்கள், 'அடுப்பே இல்லாமல் அவல் உணவு செய்வது எப்படி? நெருப்பு இல்லாமல் நெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி?' என்ற பயிற்சி வகுப்புக்கு வருமாறு அழைப்பு விடுகின்றனர்.Image 1547486இந்தச் 'சிலிண்டர் அரசியல்' சாமானிய மக்களை இன்னும் எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகிறதோ?

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us