PUBLISHED ON : ஆக 19, 2026 06:37 PM

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள 'பெயிரென் யிசுவாங்' சர்வதேசக் கண்காட்சி மையத்தில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது 2026-ஆம் ஆண்டிற்கான 'உலக ரோபோ மாநாடு' . ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையின் பிரம்மாண்டமான எதிர்காலத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் இந்த மாநாடு அமைந்துள்ளது.



சமையல் கலை, மருத்துவ அறுவை சிகிச்சைகள், வீட்டில் முதியவர்களைப் பராமரித்தல் மற்றும் மீட்புப் பணிகள் என மனித குலத்திற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு ரோபோக்கள் செயல்முறை விளக்கமளிக்கப்பட்டன.
மனிதர்களின் கற்பனைத் திறனுக்கும் அப்பால், தொழில் மற்றும் கலைத்துறையில் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் எந்தளவுக்கு வேகமெடுத்துள்ளது என்பதற்கு இந்த பெய்ஜிங் கண்காட்சியே நேரடிச் சான்றாக உள்ளது.
