"யோகா ஒரு பயிற்சி அல்ல - அது ஒரு வாழ்க்கை முறை."
"யோகா ஒரு பயிற்சி அல்ல - அது ஒரு வாழ்க்கை முறை."
"யோகா ஒரு பயிற்சி அல்ல - அது ஒரு வாழ்க்கை முறை."
PUBLISHED ON : ஜூன் 21, 2025 12:00 AM

இப்போதுதான் ஆரம்பித்தது போல உள்ளத ஆனால் நம் நாட்டின் சர்வதேச யோகாவிற்கு வயது இன்றுடன் 11 ஆகும்.
வது சர்வதேச யோகா தினம் இந்தியா முழுவதும் ஆர்வத்துடன், ஒருமித்த உற்சாகத்தில் கொண்டாடப்பட்டது. 'யோகா நம் வாழ்க்கையின் ஒழுங்கும், நலனும்' என்பதை முன்னிலைப்படுத்தும் இந்த நிகழ்வுகள், தனிநபர் மட்டுமல்லாமல் சமூக ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்றன.

இந்தாண்டு யோகா தினத்தின் தேசிய தலைமை நிகழ்வு ஆந்திரப் பிரதேசம், விசாகபட்டினத்தில் நடைபெற்றது.பிரதமர் மோடி, மாணவர்கள், பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் யோகா அமர்வில் அவர் ஈடுபட்டார்.
இந்திய ராணுவம், சியாசின் பனிக்காடுகளில், கடுமையான பனி சூழலிலும் யோகா நிகழ்வை நடத்தியது. இது நாட்டின் வீரர்களின் மன உறுதியையும் யோகாவின் பலத்தையும் எடுத்துக்காட்டியது.
பிஎஸ்எப்., வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள், அட்டாரி-வாகா எல்லையில் யோகாவில் ஈடுபட்டது மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியது.


கொச்சியில் மோகன்லால் தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிர்ப்புணர்வு யோகா செய்து அனைவருக்கும் நல்வழி உணர்வை ஏற்படுத்தினார்.
அஹமதாபாத்தில் ஒரு யோகா நிறுவனம், நிறுத்திய வாகனங்கள் மீது யோகா நிகழ்வை நடத்தியதன் மூலம், சிக்கலான சூழலிலும் யோகாவை செயல்படுத்த முடியும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இருந்தது.
மனோவிகாஸ் கேந்திரா சிறப்பு குழந்தைகள், கொல்கத்தாவில் யோகாவில் ஈடுபட்டது அவர்களது மனவலிமையை எடுத்துக்காட்டும் வகையில் இருந்தது.


-எல்.முருகராஜ்