அரசு நூலகங்களில் 'அதர பழசு' நூல்கள்!
அரசு நூலகங்களில் 'அதர பழசு' நூல்கள்!
அரசு நூலகங்களில் 'அதர பழசு' நூல்கள்!

யாருக்கு லாபம்?
சமீபத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடந்திய, 47வது சென்னை புத்தக கண்காட்சிக்கு, தமிழக அரசு 75 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளது. அரசு நல்ல நோக்கத்துடன் தான் இத்தனை லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. ஆனால் அந்த தொகையால் வாசகர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் எந்த பலனுமில்லை. இந்த ஆண்டு, 'பபாசி' நடத்திய சென்னை புத்தக கண்காட்சியில், பதிப்பாளர்கள் பலருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கண்காட்சிக்கும் வரும் வாசகர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பதிப்பாளர்களிடம், புத்தக அரங்குகளுக்கு வாடகை அதிகம் வாங்கப்படுகிறது. வாடகை கொடுக்கும் அளவுக்கு கூட இந்த முறை புத்தகங்கள் விற்பனையாகவில்லை.
நுாலகத்தில் நவீனம்
வாசிப்பின் முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் விளக்க வேண்டும். இதற்காக அரசு செலவு செய்யலாம். நுாலகங்களை நவீனப்படுத்தலாம். இதனால் வாசகர்கள் பலனடைவர். மக்கள் புதிய விஷயங்களை தேடுகின்றனர். நவீன ஊடகங்கள் எத்தனை வந்தாலும் புத்தங்களுக்கு ஈடாகாது. புத்தகங்கள் படிப்பவர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க செய்ய வேண்டும். அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதுதான் அரசின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.


