தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ வயசு வெறும் நம்பர், ஆசை இருந்தா போதும்

வயசு வெறும் நம்பர், ஆசை இருந்தா போதும்

வயசு வெறும் நம்பர், ஆசை இருந்தா போதும்


ADDED : ஆக 08, 2026 02:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 02:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மகள் காலேஜில் சேர்ந்த பிறகு, சங்கீதாவின் அன்றாட வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது. வீடு முழுக்க அமைதி.

மகளை சுற்றியே சுழன்ற வாழ்க்கையில் திடீர் வெறுமை மனசை பாதிச்சிருக்கு.

பார்க்க வந்த பள்ளி தோழியால் நம்ப முடியவில்லை. “மியூசிக், பாட்டு சத்தம் கேட்டாலே உற்சாகமா ஆட ஆரமிச்சுருவயே.. அத பாத்து எங்களுக்கும் குஷி வந்துரும். இப்ப ஏன் இப்டி டல்லடிச்சு கிடக்ற..?” என்று அக்கறையா விசாரிச்சார்.

மகளுக்கு பாத்து பாத்து எல்லாமும் செஞ்சு பழகிட்டு, இப்ப சும்மா இருக்றது சோகமா இருக்குனு சங்கீதா சொன்னதும், “அப்ப இந்த காம்ப்ளெக்ஸ்ல உள்ள குழந்தைகளுக்கு டான்ஸ் சொல்லி கொடுக்கலாமே!”ன்னு தோழி சொல்லிருக்கார்.

”ஸ்கூல்ல, பிரண்சோட, வீட்டு பங்ஷன்ல ஆடுவேனே தவிர, புரபஷனலா டான்ஸ் கத்துக்கலயே..”னு சங்கீதா தயங்கிருக்காங்க.

“உன்னால முடியும்… முதல்ல உன்னை நம்பு!”னு சினிமாடிக்கா தோழி சொல்லிருக்காங்க.

சங்கீதாவின் வாழ்க்கையவே மாத்திருச்சு அந்த ஊக்கம். சின்னதா ஆரம்பிச்ச டான்ஸ் கிளாஸ் இப்ப ஏராளமான குழந்தைகளின் சிரிப்புக்கும், தன்னம்பிக்கைக்கும் ஆதாரமா வளர்ந்திருக்கு.

ஒவ்வொரு மேடையிலும் குழந்தைகள் ஆடுவதை பார்த்தபோது, “நான் எடுத்த முடிவு சரிதான்னு மனசு நிறைஞ்சிடுது” என நெகிழ்கிறார்.

கனவுகளுக்கு பர்த் சர்டிபிகேட் இருக்கா, என்ன? 40 வயசு தாண்டிட்டதால சங்கீதா டான்ஸ் ஆட கூடாது அல்லது கத்து கொடுக்க மூடாதுனு அரசாங்க ரூல்ஸ் இல்லையே.

மனசுல உறுதி இருந்தா எந்த வயசுலயும் புதுசா ஆரம்பிக்கலாம் என்பதற்கு சங்கீதா எடுத்துக்காட்டு.

கணவர் அசோக் தனக்கு சப்போட்டாக இருந்ததை போல, ஒவ்வொரு பெண்ணுக்கும் வீட்டில் ஆதரவு கிடைத்தால் சாதிப்பது சுலபம் என்று சுட்டி காட்டுகிறார். ஐடியா கொடுத்த தோழியை மனதில் குடிவைத்திருக்கிறார்.

“நான் உன்னை நம்புறேன்; நீயும் நம்பு”னு அந்த தோழி சொன்ன மாதிரி நீங்களும் யாருக்காவது சொல்லி பாருங்க. அது அவங்க வாழ்க்கையையே மாத்திடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us