Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : ஆக 30, 2019 02:26 PM


Google News
Latest Tamil News
* அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்துவது ஏன்?

என்.ஜெ. கனகேஸ்வரி, திருப்பூர்

போரில் ராமர் வெற்றியை சொன்ன அனுமனுக்கு வெற்றிலை மாலையை கொடுத்தாள் சீதை. வெற்றியை குறிப்பது வெற்றிலை மாலை. அனுமனுக்கு வெற்றிலை மாலையிட்டு வெற்றியை பெறுங்கள்.

* வீட்டில் வில்வ மரம் தானாக வந்துள்ளது. அதை விளக்கேற்றி வழிபடலாமா?

அ.சுப்பிரமணியன், திண்டிவனம்

சிவ வழிபாட்டிற்குரிய வில்வத்தை வீட்டில் வளர்க்கலாம். மகாலட்சுமி இருப்பதால் இதற்கு 'ஸ்ரீ விருட்சம்' என்றும் பெயர். இதனடியில் விளக்கேற்றினால் சிவனருள், லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

* ருத்ராட்சம் அணிவதால் திருமணம் தடைபடுமாமே...

ஆ.இளந்திரையன், மவுலிவாக்கம்

சிவனின் சின்னங்களில் சிறப்பானது ருத்ராட்சம். இதை அணிவது புண்ணியம். இதனால் நல்ல மணவாழ்க்கை அமையும். மதுரையில் பாண்டிய அரசியான மீனாட்சியை மணம் புரிந்து 'கல்யாண சுந்தரராக' இருப்பவர் சிவன் தானே!



* அமாவாசையன்று காகத்திற்கு சோறு வைத்தால் போதாதா?

க. நஞ்சையன், கோவை

தினமும் வைக்கலாம். வீட்டு பூஜையறையில் சுவாமிகளுக்கு சோற்றை நைவேத்யமாக படைத்து விட்டு, அதை காகத்திற்கு வையுங்கள். உங்களுக்கு முன்னோர் ஆசியும், காகத்திற்கு சோறிட்ட புண்ணியமும் கிடைக்கும்.

பாவம் தீர தெய்வங்கள் கூட சிவபூஜை செய்வது ஏன்?

இ.ஷோபா, சிவகங்கை

சாதுக்கள், அந்தணர்களைக் கொல்வது பிரம்ம ஹத்தி. எதிரிகளை கொல்வது வீரஹத்தி. கருவிலுள்ள உயிரை அழிப்பது புரூணஹத்தி என்று கொலைப்பாவத்தை மூன்றாகச் சொல்வர். அரக்கர்களை கொன்றாலும் வீரஹத்தி பாவம் சேரும். இதை போக்கவே விநாயகர், முருகன் போன்றோரும் சிவனை பூஜிக்கின்றனர்.

குழந்தை இல்லாதவர்கள் பிறவிப்பயன் பெற வழியுண்டா?

வி.ராஜாமணி வத்தலக்குண்டு

சங்கடமான விஷயம் இது. இருந்தாலும் கடவுளை சரணடைந்தால் பிறவிப்பயன் கிடைக்கும். எதிர்பார்ப்பு இல்லாமல் எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள். பிறருக்கு நன்மை செய்யும் வாய்ப்பாக வாழ்வை கருதுங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us