Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : செப் 27, 2019 10:05 AM


Google News
Latest Tamil News
* அமாவாசையன்று பசுவிற்கு கீரை கொடுத்தால் முன்னோர் ஆசி கிடைக்குமா?

எஸ்.ரித்திகா, கடலுார்.

பசுவிற்கு அகத்திக்கீரை, பழம், பச்சரிசி கொடுப்பது தெய்வ காரியம். இதனால் புண்ணியம் கிடைக்கும். திதி, தர்ப்பணம் செய்வது பித்ரு காரியம். எனவே தர்ப்பணம் செய்தால் தான் முன்னோரின் ஆசி கிடைக்கும்.

* நண்பர் தந்த காளிங்க நர்த்தன கிருஷ்ணரை பூஜிக்கலாமா?

டி.விகாஷ், சென்னை

கடவுளுடைய திருவுருவம் எதுவானாலும் பூஜையறையில் வைக்கலாம். தினமும் விளக்கேற்றி நைவேத்யம் படைத்து வழிபடுங்கள்.

* பிறந்த நட்சத்திரத்தில் தவிர்க்க வேண்டியவை என்ன?

கே.ஆராத்யா, ஊட்டி

பிறந்த நட்சத்திரம் மற்றும் அதில் இருந்து 10, 19 வது நட்சத்திரத்தன்று திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள், புதிய முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இவற்றை முறையே ஜன்மம், அனுஜன்மம், திரிஜன்மம் என்பர்.

* சங்கல்பம் என்றால் என்ன?

எம்.ஷிவானி, சிவகங்கை

எந்த செயலில் ஈடுபட்டாலும் அதற்கான குறிக்கோள் ஒன்று இருக்கும். குறிப்பிட்ட இந்த செயல் வெற்றி பெற வேண்டும் என சுவாமியிடம் சொல்லி அருள்புரிய வேண்டுவதே சங்கல்பம். இதை தமிழில் 'குறிக்கோள் பகருதல்' என்பர்.

குழந்தைகள் நன்றாக படிக்க என்ன செய்யலாம்?

சி.வர்ஷன், மதுரை.

மந்திரத்தால் மாங்காய் விழாது. சுயமுயற்சி முக்கியம். குழந்தைகளை தினமும் உற்சாகப்படுத்தி, படிக்கச் சொல்வதோடு, தொலைக்காட்சி, அலைபேசியில் நேரத்தை வீணாக்காமல் பார்த்துக் கொள்வது பெற்றோரின் கடமை. சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர் வழிபாடு கல்வி வளர்ச்சிக்கு துணை நிற்கும்.

சுவாமிக்கு படைக்கும் பால் சூடாக இருக்கலாமா?

எம்.அனன்யா, புதுச்சேரி

பக்தி என்பது அன்பின் வெளிப்பாடு. அதற்காகத்தான் நாம் பூஜை செய்கிறோம். எனவே நமக்கு எது பிடிக்குமோ அதைப் போல மிதமான சூட்டில் பாலை படைக்கலாம்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பது ஏன்?

ஏ.ஜி.பானு, நெய்வேலி

இருவரும் அன்புக்கு மட்டும் கட்டுப்படுபவர்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் நம் மீது அன்பு செலுத்துபவர்கள். எனவே இவர்களை ஒன்றாக மதிக்கிறோம்.

சூப்பர் மார்க்கெட்டில் விற்கும் கோமியத்தை பயன்படுத்தலாமா?

எஸ்.கோபாலகிருஷ்ணன், திண்டிவனம்

பசுவிடமிருந்து பெறப்பட்டது என்ற உறுதி இருந்தால் மட்டுமே பூஜைக்கு பயன்படுத்தலாம்.

வீட்டில் குபேரர் சிலை இருக்கலாமா?

எஸ்.சாய்ஸ்ரீ, பெங்களூரு

முன்பு குபேர வழிபாடு இல்லை. இப்போது குபேரர் சிலை எங்கும் கிடைக்கிறது. பாரம்பரிய பூஜையைச் செய்தாலே போதுமானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us