ADDED : மார் 17, 2017 01:58 PM

ஒரு இளைஞன் மனச்சோர்வுடன் தோட்டத்தில் அமர்ந்திருந்தான். அங்கு ஒரு துறவி வந்தார். இளைஞனைக் கண்ட அவர், “ஏனப்பா... உனக்கு உடல்நலம்
இல்லையா? கவலையுடன் இருக்கிறாயே?” என்றார்.
“மனைவி, மக்கள் இருந்தும் வாழ்வில் பிடிப்பு இல்லை. நிறைய பணம் இருந்தாலும் மனம் வெறுமையாக இருக்கிறது. மகிழ்ச்சி எங்கே இருக்கிறது என்றே
தெரியவில்லை?” என வருந்தினான் இளைஞன்.
சற்றும் எதிர்பாராத நிலையில் அவன் கையிலிருந்த பணப்பையைப் பிடுங்கிய துறவி வேகமாக ஓடினார்.
'ஐயோ என் பணம்... பணம் ” என இளைஞன் பின் தொடர்ந்தான். சற்று தூரம் ஓடியதும், பையை வீசிய துறவி பையை வீசிவிட்ட ஓரிடத்தில் மறைந்து கொண்டார். இளைஞன் பையை எடுத்து பணத்தை சரிபார்த்தான். முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது.
“என்னப்பா! நீ எதிர்பார்த்த மகிழ்ச்சி இப்போது கிடைத்ததா?” என்று கேட்டபடியே வெளிப்பட்டார் துறவி.
இளைஞன் ஆச்சரியமாக அவரைப் பார்த்தான்.
துறவி அவனிடம், “தம்பி! மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை. அது நம்மை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது,” என்றார்.