Dinamalar-Logo
Dinamalar Logo

ADDED : மே 03, 2008 01:38 AM

Google News
Latest Tamil News

இந்த ஹோமம் பண்றது விசேஷம்!

ஒருவனிடம் தெய்வபக்தி இருப்பது உண்மையானால், உதவி செய்யும் குணம் அவனிடத்தில் குடிகொண்டிருக்கும். இந்த எண்ணம் இல்லாத இடத்தில் தெய்வபக்தி வேஷமே தவிர வேறொன்றுமில்லை. ஒரு மரத்தின் வேரும், விழுதுகளும் அந்த மரத்தினை தாங்குகின்றன. அது போல, தம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றவர்களை அவர்களின் பிள்ளைகள் தாங்குவது கடமையாகும்.பொதுவாக அனைவரிடத்திலும் ஒரு தீயகுணம் இருக்கிறது. தான் குற்றம் செய்தால் சுண்டைக்காய் போலவும், அதையே மற்றவர்கள் செய்தால் பூசணிக்காய் போலவும் நினைக்கிறார்கள். இந்த குணத்தை மாற்றிக் கொள்வது நல்லது.தெய்வம் என்பது அறிவுமயமாக எங்கும் நிறைந்திருக்கிறது. அந்த அறிவுக்கடலில் நாம் ஒவ்வொருவரும் நீர்த்திவலை போல் ஆவோம். நம்மை அகங்காரம் என்ற மாசு மூடி இருக்கிறது.

இந்த அகங்காரத்தை நீக்கி விட்டால் தெய்வ சக்தியும், ஞானமும் எல்லாருக்கும் உண்டாகும். ஏதாவதொரு தீய குணத்தை விட்டு விட எண்ணி வெற்றி பெற்றால், அதன் பின் எந்தவொரு தீயஎண்ணத்தையும் வெற்றி கொள்வதில் அவ்வளவு போராட்டம் இருக்காது. ண தானாக விரும்பி, ஒவ்வொருவரும் உழைத்தல் எனும் ஹோமத்தைச் செய்து சுத்தி செய்ய வேண்டும். அந்த யாகத்தீயில் நம் பாவங்கள் வெந்து விடும். சோம்பல் எனும் குணம் அத்தீயினில் சாம்பலாகும்.-பாரதியார்

Our Apps Available On

Dinamalar

Follow us