ADDED : ஏப் 25, 2008 01:16 AM

வீட்டில் வேலையாட்கள் தாம் செய்யும் வேலைக்கு ஏற்ப கேட்காமல், மிக அதிக கூலி கேட்பர். நாம் முன்பு அவர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்ததை நன்றியுடன் நினைக்காமல் மறந்து விடுவர். சில சமயங்களில் வேலைக்கு வராமல் இருந்துவிட்டு, 'ஏன் வரவில்லை?' எனக்கேட்டால் 'பாட்டி செத்த பன்னிரண்டாம் நாள்' என்று பொய்யுரைப்பர். நாம் சொல்வது ஒன்று அவர்கள் செய்வதொன்று. நம் பகையாளியிடம் உறவாடுவர். இப்படி வேலையாட்களிடம் பட்ட துயரம் ஏராளம். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் நல்லதொரு வேலைக்காரனாக கண்ணன் வந்தான். வந்தவன் என்னிடம், ''நான் இடைக்குலத்தைச் சேர்ந்தவன். மாடுகளை பராமரிப்பேன்.

குழந்தைகளை பாதுகாப்பேன். வீட்டினை சுத்தமாக்கி விளக்கேற்றி வைப்பேன். நீங்கள் சொன்ன பேச்சைக்கேட்பேன். துணிமணிகளைப் துவைப்பேன். சிறுகுழந்தை தூங்க பாட்டிசைப்பேன். என் பெயர் கண்ணன். காசு எனக்கு பெரிதில்லை. மனதில் உள்ள அன்பே பெரிதாகும்,'' என்று தன் சிறப்புக்களை எடுத்துரைத்தான். கண்களை இமை காத்து நிற்பது போல் கண்ணன் எங்களை காத்து வந்தான். முணுமுணுக்காமல், சொன்ன பேச்செல்லாம் முகம் கோணாமல் கேட்டு நடந்தான். அவன் சேவகனாக அடியெடுத்து வைத்த நாள் முதலாய் எண்ணம் எல்லாம் கண்ணனுடையதாகி விட்டன.

-பாரதியார்