Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/மலர்ந்த முகத்துடன் இருங்கள்

மலர்ந்த முகத்துடன் இருங்கள்

மலர்ந்த முகத்துடன் இருங்கள்

மலர்ந்த முகத்துடன் இருங்கள்

ADDED : நவ 30, 2012 05:11 PM


Google News
Latest Tamil News
* தெய்வம் எப்போதும் வந்து அருளைப் பொழிந்து கொண்டிருக்கும்படி மனக்கதவைத் திறந்து வையுங்கள்.

* யாரிடமும் பொய்மதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம். நிஜமான மதிப்பே நிலைக்கும்.

* இடைவிடாமல் வேலை செய்து இந்த உலகப் பெருமைகளைப் பெற முயலுங்கள். முடியாவிட்டால் 'விதிவசம்' என்று மகிழ்ச்சியோடு இருங்கள்.

* மனத்தளர்ச்சிக்கு ஒருபோதும் இடம் கொடுக்காதீர்கள். உள்ளும் புறமும் மாசில்லாமல் தூய்மையுடன் இருங்கள்.

* எப்போதும் மலர்ந்தமுகம், இனியசொல், தெளிந்த சித்தம் உள்ளவராக இருங்கள்.

* அறிவுக்கடலில் நாம் ஒரு திவலை. நம்மை அகங்காரம் என்னும் மாசு மூடியிருக்கிறது. இதை நீக்கிவிட்டால் தெய்வீக சக்தியும், ஞானமும் உண்டாகும்.

* மனதை உற்சாகத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். உள்ளத்தில் உண்மை இருந்தால், வாக்கில் ஒளி உண்டாகும்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us