Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சுற்றுச்சூழல் மாசுபடாமல் காக்கும் மதுரை நிறுவனம்

சுற்றுச்சூழல் மாசுபடாமல் காக்கும் மதுரை நிறுவனம்

சுற்றுச்சூழல் மாசுபடாமல் காக்கும் மதுரை நிறுவனம்

சுற்றுச்சூழல் மாசுபடாமல் காக்கும் மதுரை நிறுவனம்

ADDED : மார் 25, 2010 02:17 AM


Google News

சுற்றுச் சூழல்பாதிப்பால் நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறி வருகிறது.

இதற்கு காரணம் இயற்கையை மனிதர்கள் சின்னா பின்னமாக்குவதே. இன்றைய அவசர உலகில் தம்வீட்டு குப்பையை அடுத்த வீட்டு வாசலில் குவிப்போரே அதிகம். நம்மை சுற்றியுள்ள பகுதியை, சுத்தமாக, ஆரோக்கியமாக, மாசுபடுவதில் இருந்து பாதுகாக்கும் பொதுநலம் உள்ளோர் வெகு சிலரே. சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதில் தொழில் நிறுவனங்களுக்கு அதிக பங்குண்டு. அவற்றை கட்டுப்படுத்த தனி வாரியமே இருந்தாலும், பல நிறுவனங்களை முழுமையாக கண்காணிக்க முடியவில்லை. எனவே அவை தாமாகவே முன்வந்தால் தான், சுற்றுச் சூழலை காக்க முடியும்.

மதுரை விளாங்குடி பொன்நகர் முதல் தெருவில் ஜோஸ்லின் எலக்ட்ரிக்கல் இண்டஸ் ட்ரீஸ் நிறுவனம் உள்ளது. 40க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் இந்நிறுவனம் எலக்ட் ரிக்கல் "பிட்டிங்ஸ்' தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. டியூப் லைட்டுகளுக்கான பிரேம்கள், பிட்டிங்குகள், அந்த லைட்டுகளை "கவர்' செய்யும் வகையில் தகரத்திலான "ஷேட்'கள், சோக்குகளை தயார் செய்கின்றன.

பல ஆண்டுகளாக செயல்படும் இந்நிறுவனம், பத்தாண்டுகளுக்கு முன் தீவிர தயாரிப்பில் இறங்கியது. மாடி வீடுபோன்ற கட்டடத்தில் இயங்கி வருகிறது. சுற்றிலும் குடியிருப்புகள் முளைக்க, இந்நிறுவனத்தினர் சுற்றுச் சூழலில் ஆர்வம் காட்டினர். இங்கு பிட்டிங்குகள் தயாரிக்கப்படுவதால் எந்நேரமும் சத்தம் எழும். அவற்றின் மீது "பெயின்ட்' ஸ்பிரே செய்கின்றனர். வார்னிஷ் பயன்பாடும் உள்ளது. இதனால் அவற்றின் மணம் நிறுவனம் முழுக்க வியாபித்துள்ளது.

இது வெளியில் பரவுவதை தவிர்க்க "பெயின்ட் பூத்' என்ற ஒரு சேம்பரை உருவாக்கி உள்ளனர். இதில் வைத்து பெயின்டை ஸ்பிரே செய்யும்போது, அதன் துளிகள், சிதறல்கள் காற்றால் உள்ளிழுக்கப் பட்டு, சிம்னி வழியாக வெளியேறுகிறது. இதனால் அறைக்குள் இருக்கும் பெயின்ட் வாசனை அப்படியே வெளியேற்றப்படுகிறது. வெளியில் மரம் இருப்பதால் அது அதிகம் பரவாமல் தடுக்கப்படுகிறது. இதேபோல தகடு வெட்டும், பிரஷ்ஷிங் செய்யும் சத்தமும் வெளியில் பரவுவதில்லை.

இதற்காகவே காம்பவுண்ட் உள்ளும், புறமும், நெட்டிலிங்கம், அசோகா மரங்களை நட்டுள்ளனர். அருகில் உள்ள காலியிடத்தில் வேம்பு, வாகை, வாவரைக்காய்ச்சி போன்ற மரங்களை வளர்க்கின்றனர். அடுத்து நிறுவனத்தில் சேரும் கழிவு நீரையும் தேவையின்றி ரோட்டில் ஓடவிடுவதில்லை. அருகிலேயே ஐந்தடி அகலம், 15 அடி ஆழத்திற்கு குழிதோண்டி, கூழாங் கற்களால் நிரப்பி, கழிவுநீரை பூமிக்குள் இறக்கி விடுகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டமும் பாதுகாக்கப் படுகிறது.

விற்பனை பிரதிநிதி ஜெயராஜ் கூறுகையில், ""சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளோம்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us