Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/கோபத்தைக் குறையுங்கள்

கோபத்தைக் குறையுங்கள்

கோபத்தைக் குறையுங்கள்

கோபத்தைக் குறையுங்கள்

ADDED : ஜூன் 29, 2012 11:06 AM


Google News
Latest Tamil News
* அகத்தூய்மையுடையோர்க்கு எல்லாமே தூய்மை. கெட்டழிந்தவர்களுக்கும் நம்பாதவர்களுக்குமோ எதுவுமே தூய்மை இல்லை.

* அகத்தூய்மையை விரும்புபவனை, அவனுடைய உதடுகளின் நளினத்திற்காக அரசனும் அவனுடைய தோழனாவான்.

* அக்கிரமக்காரர்கள் எதிர்பார்ப்பது அழிந்தே போகும். நேர்மையானவனோ இடுக்கண்ணிலிருந்து விடுவிக்கப்படுவான்.

* தன்னிலே அசுத்தம் என்று எதுவுமில்லை. ஆனால், எதையும் அசுத்தம் என்று மதிப்பவனுக்குத் தான் அது அசுத்தமாயிருக்கிறது.

* ஒடுக்கி அமுக்கப்பட்டவர்களுக்குக் கடவுளே அடைக்கலமானவர். சங்கட வேளைகளிலும் அவரே அடைக்கலமானவர்.

* அடக்குமுறையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டாம். செல்வம் பெருகினால் அவற்றின்மீது உங்கள் இருதயத்தை வைத்துவிட வேண்டாம்.

* பலசாலியை விடக் கோபம் கொள்வதில் மிதமாக இருப்பவனே சிறந்தவன்.

- பைபிள் பொன்மொழிகள்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us