Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/இனிய சொல் பேசுங்கள்

இனிய சொல் பேசுங்கள்

இனிய சொல் பேசுங்கள்

இனிய சொல் பேசுங்கள்

ADDED : மே 01, 2011 06:05 AM


Google News
Latest Tamil News
* நிலையில்லாத செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் நம்முடைய இன்பத்திற்காகவே அனைத்தையும் நிறைவாக அளிக்கும்,

கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்க வேண்டும்.

* எல்லோருக்கும் கடவுளும் தந்தையும்

ஆனவர் ஒருவரே. அவர் அனைவருக்கும்

மேலானவர். அவர் அனைவர் மூலமாகவும்

செயலாற்றுவதுடன் அனைவருக்குள்ளும் இருக்கிறார்.

* இறைவன் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல், நீங்களும் பிறரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும்.

* ஞானமும் அறிவும் உனக்கு இனிமையாய் இருக்கும். அவற்றை நீ அடைந்தால் முடிவில் உனக்குப் பயன் கிடைக்கும். உன் நம்பிக்கையும் வீண்போகாது.

* இனிய சொற்கள் தேன்கூடு போன்றவை. மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கும் நலம் தருபவையாகும்.

*மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன்

வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.

* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய். நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல்புரிவதுமில்லை சிந்தனை செய்வதுமில்லை.

- பைபிள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us