Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/தர்மம் வளர்க்கும் தீபங்கள்

தர்மம் வளர்க்கும் தீபங்கள்

தர்மம் வளர்க்கும் தீபங்கள்

தர்மம் வளர்க்கும் தீபங்கள்

ADDED : ஜன 12, 2011 07:01 PM


Google News
Latest Tamil News
* அவரவர் தேவைகளைக் குறைத்துக் கொண்டு, மனசினால் நிறைந்து, சுபிட்சமாக இருக்க வேண்டும். வசதி உள்ளவர்கள்

கூட எளிய வாழ்க்கை நடத்துவது

அவர்களுக்கும் நல்லது, மற்ற ஜன

சமூகத்துக்கும் நல்லது.

* பெண்கள் தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக உள்ளனர். இவர்களின் பண்பு கெடுகிறதற்கு இடம்

தரக்கூடாது.

* இன்றைய தலைறையினருக்கு தர்மத்தை ஏற்கும்படியாக, நாம் சரித்திரத்தை குழைத்துக் கொடுத்தால் தான் அது நம்மை நல்வழிப்படுத்த உபயோகமாகும். புராணம் இதைச் செய்வதால் இவற்றை நாம் படிக்க வேண்டும்.

* 'இளைமையில் கல்' என்று சொல்வார்கள், ஆகவே ஒருவன் இளம் வயதில் கல்வி கற்பது மிகவும் அவசியம்.

* உடல் பலம், அஹிம்சை, தைரியம் இவற்றோடு

பிறருக்கு உதவும் மனப்பான்மையும் ஒருவருக்கு

வேண்டும்.

* தர்மத்துக்கு ஆபத்து வந்தால் உயிரையும் கொடுத்து

காப்பாற்றுவது தான் ஒரு நல்ல இளைஞனின் கடமை.

* ஆயிரங்காலத்துப் பயிரான திருமணத்தை, வரதட்சணை என்னும் பூச்சி அழிக்கின்ற வகையில் உள்ளது.

-காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us