Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/பேசப் பழகுங்கள்

பேசப் பழகுங்கள்

பேசப் பழகுங்கள்

பேசப் பழகுங்கள்

ADDED : நவ 18, 2013 12:11 PM


Google News
Latest Tamil News
* ஒருவரைப் புகழ்ந்து பேசுவதிலும் கட்டுப்பாடு இருக்க வேண்டும். ஒரேயடியாக புகழ்ந்து அவரை ஆணவம் மிக்கவராக மாற்றி விடக்கூடாது.

* ஆசையும், கோபமும் மனிதனைப் பாவத்தில் தள்ளுகின்றன என பகவத்கீதையில் கிருஷ்ணர் வலியுறுத்துகிறார்.

* பாவியை வெறுப்பதும், கோபம் கொள்வதும் கூடாது. அவர்களுடைய மனமும் நல்வழியில் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பது ஒன்றே நாம் செய்ய வேண்டியதாகும்.

* நல்ல குணங்களைப் பின்பற்றுவதோடு, கடவுள் மீது பக்தி செலுத்தி வாழ்வதே தரமான வாழ்வு. ஆனால், ஆடம்பரமாக வாழ்வதையே வாழ்க்கைத்தரம் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

* 'வளவள' என்று எப்போதும் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. சுருக்கமாகப் பேசப் பழகிக் கொண்டால், வாக்கில் ஒரு பிரகாசம் உண்டாவதோடு, நம் சக்தியும் விரயமாகாது.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us