Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/இனிமையாகப் பேச வேண்டும்

இனிமையாகப் பேச வேண்டும்

இனிமையாகப் பேச வேண்டும்

இனிமையாகப் பேச வேண்டும்

ADDED : டிச 01, 2013 10:12 AM


Google News
Latest Tamil News
* உடம்பிலும், உடுத்தும் ஆடையிலும் அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. இவை இரண்டையும் விட மேலான மனதை தூய்மையாக வைத்திருப்பது தான் முக்கியம்.

* தினமும் மனம், வாக்கு, உடம்பு இந்த மூன்றினாலும் நல்ல செயல்களை மட்டும் செய்யுங்கள். பணத்தைத் தர்மகாரியங்களுக்காக நல்வழியில் செலவழியுங்கள்.

* விரும்பிய பொருள் கிடைக்காமல் போனால், அதை அடைய குறுக்குவழியை மனிதன் நாடுகிறான். அதன் மூலம் பெரும் பாவத்தை சம்பாதிக்கிறான்.

* உலகில் பலரும் புண்ணியம் மட்டுமே தேட விரும்புகிறார்கள். ஆனால், செய்வதில் பெரும்பகுதி பாவமாகவே இருக்கிறது. இதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது.

* வாக்கினால் துன்பம் இழைக்காதீர்கள். மற்றவர் மனம் நோகப் கடும்சொற்களை ஒருபோதும் பேசுவது கூடாது. இனிய பேச்சே உங்களை உயர்த்தும்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us