Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாத்மா காந்தி/தியாக மனம் வேண்டும்

தியாக மனம் வேண்டும்

தியாக மனம் வேண்டும்

தியாக மனம் வேண்டும்

ADDED : மார் 11, 2013 10:03 AM


Google News
Latest Tamil News
* கடமையைச் சரியாக நிறைவேற்றினால் உரிமை தானாகவே வந்து சேரும்.

* கடவுள் உண்மை என்று கூறுவதை விட, உண்மையே கடவுள் என்பது சிறந்தது.

* தேவைக்கு அதிகமாக செல்வம் சேர்த்து வைப்பது, ஒருவகையில் திருட்டு தான்.

* கடவுளின் சித்தத்தை அறிந்து கொள்ளும் சக்தியை தகுந்த பயிற்சியின் மூலம் பெற முடியும்.

* பிறப்பினால் உயர்வு தாழ்வு கொள்வது கடவுளுக்கு எதிரானது.

* பிறருக்காக தியாகம் செய்யும் மனநிலை கொண்டவனால், தனக்காக எதையும் தேட நேரம் இருக்காது.

* மனிதனின் இதயத்தில் மறைந்து கிடக்கும் நல்ல சக்திகளை மலரச் செய்வதே கலை.

* கலைஞர்கள் அவரவர்க்குரிய கலைகளால் மனிதர்களை நல்வழிப்படுத்த முயலவேண்டும்.

* மனிதர்களிடம் ஒழுக்கத்தை உருவாக்குவதே உண்மையான கல்வியின் பயன்.

* ஏளனம் என்பது பேசும் நாவை இழிவுபடுத்துமே அன்றி, ஏசப்பட்டவனை இழிவுபடுத்துவதில்லை.

- காந்திஜி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us