Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாத்மா காந்தி/ஆன்மிகத்தின் அடிப்படை

ஆன்மிகத்தின் அடிப்படை

ஆன்மிகத்தின் அடிப்படை

ஆன்மிகத்தின் அடிப்படை

ADDED : ஜன 25, 2013 04:01 PM


Google News
Latest Tamil News
* உண்மையை மறைக்காமல் சொல்லும் மன வலிமை வேண்டும்.

* நமது ஒவ்வொரு எண்ணத்தையும் கடவுள் நன்றாக அறிவார்.

* நல்ல நட்பைப் பெற வேண்டுமானால், நீயும் நல்ல நண்பனாக இரு.

* உடல்சோர்வு பலவீனமே அல்ல. மனச்சோர்வு தான் பலவீனம்.

* தொண்டு தான் உண்மையான அன்பை வெளிப்படுத்துமே தவிர, வெறும் வாய்ச்சொல்லால் பயனில்லை.

* பொய்மை ஒருநாள் மறைந்து போகும். உண்மையே மேலே உயர்ந்து நிற்கும்.

* ஆன்மிக வாழ்வின் அடிப்படை குணம் அஞ்சாமை.

* மனப்பூர்வமாக உள்ளம் கனிந்து செய்யும் பிரார்த்தனையை இறைவன் ஏற்க மறுப்பதில்லை.

* உலகிலுள்ள எல்லா சக்திகளையும் விட, ஆன்மிக சக்தியே அதிக பலம் வாய்ந்தது.

* தவறை மன்னிக்கும் குணம் ஒருவரின் உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.

- காந்திஜி

(இன்று காந்திஜி நினைவுதினம்)




      Our Apps Available On




      Dinamalar

      Follow us