Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/மென்மையை விரும்பும் இறைவன்

மென்மையை விரும்பும் இறைவன்

மென்மையை விரும்பும் இறைவன்

மென்மையை விரும்பும் இறைவன்

ADDED : டிச 11, 2011 09:12 AM


Google News
Latest Tamil News
* எவர் இறைவனையும் மறுமையையும் ஏற்றுக் கொள்கிறாரோ, அவர் நல்லவற்றைக் கூறவும்; அல்லது மவுனமாக இருக்கவும்.

* (தவறு செய்பவர்களை) மன்னித்துவிட வேண்டும்; பொறுத்துக் கொள்ளவும் வேண்டும். இறைவன் உங்களை மன்னிக்க வேண்டுமென விரும்புவதில்லையா என்ன?

* எப்போதும் குறை கூறிக்கொண்டே இருப்பவனும், சபிப்பவனும், ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறை நம்பிக்கையாளன் அல்லன்.

* இறைவன் மென்மையானவன், அவன் எல்லாவற்றிலும் மென்மையையே விரும்புகிறான். உன்னிடமுள்ள இரண்டு பண்புகளை இறைவன் மிகவும் நேசிக்கிறான். அவை மென்மை,சகிப்புத்தன்மை.

* நாணமும் இறைநம்பிக்கையும் இணைந்தே உள்ளது. அதில் ஒன்று கெட்டுவிட்டால் இன்னொன்றும் கெட்டுவிடும்.

* எந்தப்பொருளில் மானக்கேடான தன்மை பொதிந்துள்ளதோ அது அதனைப் பாழ்படுத்தி விடுகின்றது. அந்த பொருளில் நாணம் உள்ளதோ அது அதனை ஒளிரச் செய்கிறது.

- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us