Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/சாந்த குணத்துடன் வாழ்வோம்

சாந்த குணத்துடன் வாழ்வோம்

சாந்த குணத்துடன் வாழ்வோம்

சாந்த குணத்துடன் வாழ்வோம்

ADDED : ஆக 19, 2012 03:08 PM


Google News
Latest Tamil News
* அண்டை வீட்டார் பசியோடிருக்க, தான் மட்டும் வயிறார உண்டு களித்திருப்பவன் உண்மையான மனிதன் ஆக மாட்டான்.

* சிறு குழந்தைகளிடம் அன்பு காட்டாதவனும், மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தாதவனும் என் அன்பிற்குரியவன் அல்லன்.

* அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கின்றது.

* எளிமையும் மரியாதையும் உயர்ந்த பண்புகளாகும்.

* எல்லாவிதமான அடக்கமுடைய செயல்களும் சிறந்தவைகளே.

* எவன் சாந்தகுணத்தைப் பெற்றிருக்கிறானோ அவன் நன்மையான பகுதியை உடையவன்.

* மக்களிடம் அன்பாக இருங்கள். கடுமையாக இராதீர்கள். அவர்களுக்கு ஊக்கமளியுங்கள். அவர்களை ஒதுக்கித் தள்ளாதீர்கள்.

* பேராசை வறுமையைக் குறிக்கின்றது. அவாவின்மை செல்வத்தைக் குறிக்கின்றது.

* விருந்தில் எல்லோரும் உண்டு முடிவடைவதற்குள் உணவிலிருந்து கையை எடுத்து விடாதீர்கள்.

- நபிகள் நாயகம்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us