Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/ஒழுக்கத்திற்கான பயிற்சி

ஒழுக்கத்திற்கான பயிற்சி

ஒழுக்கத்திற்கான பயிற்சி

ஒழுக்கத்திற்கான பயிற்சி

ADDED : ஏப் 01, 2012 09:04 AM


Google News
Latest Tamil News
* நற்செயல் என்பது நற்குணத்தைப் பெறுவதாகும். எந்தச் செயலை நீ மனதில் நினைத்து அதனை பிறர் அறிவதை விரும்பவில்லையோ, அது பாவச் செயலாகும்.

* அளவில் சிறிதாக இருப்பினும், தொடர்ந்து நிலையாக செய்யும் செயல்களையே இறைவன் நேசிக்கின்றான்.

* இறைதிருப்தியைப் பெறும் நோக்குடன் மனிதன் தன் குடும்பத்தாருக்கு செலவிடுவதையும் ஓர் அறச்செயலாகவே இறைவன் காண்கின்றான்.

* நாணமும், பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவதும் இறை நம்பிக்கையின் பகுதிகளாகும்.

* உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டு இருக்கின்றது, (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம்உடையவர்களாய்த் திகழக்கூடும்.

* இறைவழிபாடுகள் சடங்குகள் அல்ல. இறையச்சம், ஒழுக்கம் ஆகியவற்றை அடைவதற்கான பயிற்சிகளே அவை.

* ஹஜ்ஜின் போது இச்சைகளைத் தூண்டக்கூடிய செயல், தீவினை, சண்டை சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது.

- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து





      Our Apps Available On




      Dinamalar

      Follow us