Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/நன்றி உள்ளவர் யார்

நன்றி உள்ளவர் யார்

நன்றி உள்ளவர் யார்

நன்றி உள்ளவர் யார்

ADDED : மார் 25, 2012 10:03 AM


Google News
Latest Tamil News
* செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகிறானோ, அதற்குரிய பலன் தான் அவனுக்குக் கிட்டும்.

* இறைவன் உங்கள் உருவங்களையோ, செல்வங்களையோ பார்ப்பதில்லை. உள்ளங்களையும், செயல்களையும் மட்டுமே பார்க்கிறான்.

* உங்களின் நெஞ்சங்களில் இருப்பவற்றை நீங்கள் மறைத்தாலும் அல்லது அவற்றை வெளிப்படுத்தினாலும் இறைவன் அவற்றை நன்கறிகிறான்.

* பிறரைவிடக் கூடுதலாக உலக வசதிகளைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் உங்களை மெய் மறதியில் ஆழ்த்தி வைத்திருக்கிறது... நீங்கள் மண்ணறைகளைச் சென்றடையும் வரையில்!

* இரு விஷயங்கள் ஒருவனிடமிருந்தால் அவனை நன்றி உள்ளவன் என்றும், பொறுமை உள்ளவன் என்றும் இறைவன் குறித்துக் கொள்வான். 1. உலக வசதிகளைப் பொறுத்த வரையில் தன்னை விடக் கீழானவரைப் பார்த்து இறைவனுக்கு நன்றி செலுத்துதல், 2. இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்ளுதல்.

-வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து




      Our Apps Available On




      Dinamalar

      Follow us