ADDED : மே 25, 2009 07:19 PM

<P>* உலகத்தின் தாய் தந்தையரே கடவுள். நம் உடலின் தாய் தந்தையே நம் பெற்றோர். உடலையளித்த பெற்றோ ருக்கு நன்றிக் கடன் செலுத்துவது போல, உலகை நமக்களித்த கடவுளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டியது அவசியம். <BR>* அடுத்தவர் நம்மிடம் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்து அன்பு செய்வது அன்புக்கு விலை வைப்பதுபோலாகும். வெகுமதியை எதிர்பார்த்து அன்பு பாராட்டக்கூடாது. எதிர்பார்ப்பு என்பதே இல்லாமல் காட்டும் அன்பே உயர்ந்ததாகும். <BR>* கொடிவகைகளைப் பயிர் செய்து அதன் போக்கில் வளரவிட்டால் புதர்மண்டிப் போய்விடும். காடாக ஒழுங்கின்றி வளராமல் சீராக வளர அதன் கிளை களை வெட்டி சீர்செய்து பந்தலில் படரச் செய்ய வேண்டும். அதுபோல், மனதிலும் வேண்டாத எண்ணங்களை வெட்டி முறைப்படுத்தினால் உள்ளம் சீராகிவிடும். <BR>* வழிபாட்டில் இடம்பெறும் இலை, மலர், கனி,நீர் என்று ஒவ்வொன்றும் உள்ளுறையாக அமைந்தவை. துளசி இலை என்பது நம் உடலையே இறைவனுக்கு கருவி யாக்குவதாகும். மலர் நம் இதய மலரைக் குறிக்கும். கனி என்பது பக்குவப்பட்ட மன நிலையைக் குறிப்பதாகும்.</P>