Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/மனஉறுதியுடன் இருங்கள்

மனஉறுதியுடன் இருங்கள்

மனஉறுதியுடன் இருங்கள்

மனஉறுதியுடன் இருங்கள்

ADDED : அக் 11, 2010 07:10 PM


Google News
Latest Tamil News
* ஒவ்வொரு மனித இதயத்தின் உள்ளும் மிக ஆழத்தில் ஆதிஅந்தமில்லாத இறைவன் ஒளிந்து கொண்டிருக்கின்றான். அவனை உணர்ந்தவனே உண்மையை உணர்ந்தவன் ஆவான்.

* தன்னுடைய பலவீனங்கள், குற்றங்கள், பாவங்கள் எல்லாவற்றையும் வேறொருவரின் மேல் சுமத்துவது மனித இயல்பாக இருக்கிறது. நம்முடைய தவறுகளை உணர மறுப்பது தான்

இதற்குக் காரணம்.

* எத்தனை நல்ல நூல்களை வாசித்தாலும் நம்மால் தூயவராக முடியாது. உண்மையை நாம் உணர வேண்டுமானால், தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அப்போது மெய்யுணர்வு நம்முள் மலரத் தொடங்கும்.

* உங்களுக்குப் பிடித்ததை கடைபிடிப்பதுபோல, மற்றவர்களும் அவரவருக்கு விருப்பமானவற்றை பின்பற்றும் சுதந்திரத்தைக் கொடுங்கள். ஏனென்றால், சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவதில்லை.

* எந்த விஷயத்தையும் நன்கு ஆய்ந்து பாருங்கள். கொண்ட கொள்கை மற்றும் குறிக்கோளில் மனவுறுதியுடன் இருங்கள்.

விவேகானந்தர் 





      Our Apps Available On




      Dinamalar

      Follow us